ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. 8 டாலர் ப்ளூ டிக் திட்டத்தை திரும்பப் பெற்ற டிவிட்டர்.. என்ன நடந்தது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க் அறிவித்த மிகவும் முக்கியமான மாற்றம் 8 டாலர் வெரிபிகேஷன் திட்டம் தான், இத்திட்டத்திற்குப் பல கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் வருவாய் ஈட்டியே ஆக வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் இத்திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

 

இந்த நிலையில் இத்திட்டத்தைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனம் இந்த வார துவக்கத்தில் அறிமுகம் செய்த 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது இதனால் இத்திட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம்

8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம்

இதன் மூலம் தற்போது 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் கணக்குகளைத் திறந்த அனைவரின் கணக்குகளும் பயன்பாட்டில் இருக்கும், ஆனால் புதிதாக யாராலும் 8 டாலர் திட்டத்தின் கீழ் கணக்குகளைத் திறக்க முடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய விஷயம்
 

பழைய விஷயம்

இதேபோல் டிவிட்டர் தனது முக்கியமான கணக்குகளுக்கு அளிக்கப்படும் official பேட்ச் திரும்பவும் கொண்டுவரப்பட்டு உள்ளது, இதேபோல் நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டு இருந்த GREY பேட்ச் வெள்ளிக்கிழமை முதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலி கணக்குகள்

போலி கணக்குகள்

எலான் மஸ்க் முன்பும் சரி, பின்பும் சரி டிவிட்டர் போலிக் கணக்குகளை எதிர்கொள்வதில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் 8 டாலர் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் வெரிபிகேஷன் பெறலாம் எனச் சலுகை வந்த நிலையில் போலிக் கணக்குகள் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

உதாரணமாக Nintendo Inc நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு டிவிட்டர் கணக்கில் நடுவிரல் காட்டும் புகைப்படம் பதிவிடப்பட்டு உள்ளது. இதேபோல் பார்மா நிறுவனமான Eli Lilly & Co பெயரில் திறக்கப்பட்ட கணக்கில் இன்சுலின் இலவசம் என அறிவிக்கப்பட்டது, இதனால் Eli Lilly & Co. தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து மன்னிப்பு கேட்டது.

டெஸ்லா

டெஸ்லா

இவ்வளவு ஏன் போலியாக உருவாக்கப்பட்ட டெஸ்லா கணக்கில் இருந்து கார் பாதுகாப்புக் குறித்துக் கிண்டல் செய்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க்-ன் நிறுனம் என்பதால் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் டிவீட்

எலான் மஸ்க் டிவீட்

இந்த நிலையில் தான் டிவிட்டர் போலி கணக்குகளைச் சமாளிக்கச் சில முக்கியக் கணக்குகளுக்கு official என்ற லேபிள் சேர்க்கப்பட்டு உள்ளது என டிவிட்டர் வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதைத் தொடர்ந்து எலான் மஸ்க், மற்றவர்களைப் போல் போலி கணக்குகள் உருவாக்கியவர்கள் பெயருக்குப் பக்கத்தில் parody என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திவால்

திவால்

டிவிட்டர் ஊழியர்கள் உடனான முதல் சந்திப்பில் இந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வான எலான் மஸ்க், டிவிட்டர் விரைவில் புதிய மற்றும் அதிகப்படியான வருவாய் ஈட்ட துவங்கவில்லை என்றால் திவாலாகும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது 8 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் திவாலாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter Suspends $8 Subscription Program; Fake Accounts Boom with company and celebrity names

Twitter Suspends $8 Subscription Program; Fake Accounts Boom with company and celebrity names
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X