சௌதி vs அபுதாபி: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் OPEC+ அமைப்பு கடந்த வாரம் உற்பத்தி அதிகரிப்பது குறித்து முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

பொதுவாக அரபு நாடுகள் மத்தியில் இருக்கும் பிரச்சனையைத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து தீர்த்துக்கொள்ளும், ஆனால் இந்த முறை OPEC+ அமைப்புக் கூட்டத்திலேயே பிரச்சனை சவதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் வாக்குவாதம் அதிகரித்தது.

 OPEC+ அமைப்புகள்

OPEC+ அமைப்புகள்

கச்சா எண்ணெய் விலையை உயர்ந்த OPEC+ அமைப்புகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த உற்பத்தியை அவரும் சேர்ந்து குறைக்க வேண்டும் எனக் கொரோனா காலத்தில் முடிவு செய்தது. இதன் வாயிலாகவே தற்போது கச்சா எண்ணெய் விலை தற்போது 75 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தம்

உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தம்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சர்வதேச சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் முடிய உள்ள உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தை, 2022 ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்க முடிவு செய்யச் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இணைந்து முடிவு செய்தது. இதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தலைமையில் அபுதாபி எதிர்த்தது.

 ஐக்கிய அரபு நாடுகள் எதிர்ப்பு

ஐக்கிய அரபு நாடுகள் எதிர்ப்பு


சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒரு நாளுக்குக் கூடுதலாக 4 லட்சம் பேரல் வரையில் அதிகரிக்க OPEC+ அமைப்பில் இருக்கும் 22 நாடுகள் உடன் சேர்ந்து ஐக்கிய அரபு நாடுகளும் ஒப்புதல் அளித்தது.

ஆனால் 2022 ஆண்டு இறுதி வரையில் உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தை நீட்டிக்கப்படும் முடிவை ஏற்க முடியாது என ஐக்கிய அரபு நாடுகள் தெரிவித்துள்ளது.

 UAE கச்சா எண்ணெய்

UAE கச்சா எண்ணெய்

OPEC+ அமைப்பின் கோட்டா அடிப்படையில் ஐக்கிய அரபு நாடுகள் ஒரு நாளுக்கு 3.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும், இந்நிலையில் உற்பத்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தை 2022 ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்கப்பட்டால் உற்பத்தி அளவீட்டை 3.8 மில்லியன் பேரலாக உயர்த்த வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகளின் எனர்ஜி அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய் கேட்டுக்கொண்டுள்ளார்.

 சுஹைல் அல் மஸ்ரூய்

சுஹைல் அல் மஸ்ரூய்

மேலும் சுஹைல் அல் மஸ்ரூய் கூறுகையில் ஐக்கிய அரபு நாடுகள் மூலம் மொத்த OPEC+ அமைப்பின் உற்பத்தி அளவீட்டில் 1/3 பங்கு எண்ணெய்-ஐ ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மற்ற நாடுகளை விடவும் ஐக்கிய அரபு நாடுகள் இந்த உற்பத்தி கட்டுப்பாடும் அதிகளவிலான வருமானத்தை இழந்து வருகிறது.

 5 மில்லியன் பேரல்

5 மில்லியன் பேரல்

ஐக்கிய அரபு நாடுகள் தலைமையில் அபுதாபி தனது எண்ணெய் உற்பத்தி அளவீட்டை மாதம் 5 மில்லியன் பேரல் அளவிற்கு உயர்த்த வேண்டும் எனச் சுமார் 25 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

 இளவரசர் முகமது பின் சயீத்

இளவரசர் முகமது பின் சயீத்

இதன் மூலம் வரும் வருமானத்தைப் பிற துறையில் முதலீடு செய்து விரைவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் இளவரசர் முகமது பின் சயீத் திட்டமிட்டுள்ளார். ஆனால் உற்பத்தி கட்டுப்பாடு தனது வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

 வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

சவுதி மற்றும் பிற OPEC+ நாடுகளில் இல்லாதது போல், அபுதாபியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தளத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக BP, டோட்டல் எனர்ஜிஸ் நீண்ட காலமாகவும், கடந்த 3 வருடத்தில் இந்தியா, சீனாவும் முதலீடு செய்துள்ளது.

 அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்

இந்நிலையில் 2016ல் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவராகச் சுல்தான் அல் ஜாபர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்நிறுவனத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

 சொத்து விற்பனை

சொத்து விற்பனை

குறிப்பாக உற்பத்தியை அதிகரிக்கவும், பல ஆசிய நிறுவனங்களுக்குச் செய்த கூட்டணிக்காகப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பைப்லைன், சுத்திகரிப்பு, ரியல் எஸ்டேட் சொத்துக்களைத் தனியார் முதலீட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது அபுதாபி அரசு.

 ஐக்கிய அரபு நாடுகளின் நிலை

ஐக்கிய அரபு நாடுகளின் நிலை

இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க விடாமல் இந்த OPEC+ நாடுகளில் உற்பத்தி கட்டுப்பாடுகள் தடுக்கும் காரணத்தால் அபுதாபி அதிகளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும், முதலீட்டுக்கான ஆதாயத்தையும் பெற முடியாமல் உள்ளது.

 Murban கச்சா எண்ணெய்

Murban கச்சா எண்ணெய்

இதற்கிடையில் அபுதாபி தனது வர்த்தகத்தை அதிகரிக்க Murban என்ற புதிய ரகக் கச்சா எண்ணெய்-ஐ உற்பத்தி செய்து சர்வதேசச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. OPEC+ நாடுகளில் இத்தகைய கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்யும் முதல் நாடு அபுதாபி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UAE against Saudi Arabia proposed deal on Oil output in OPEC meeting

UAE against Saudi Arabia proposed deal on Oil output in OPEC meeting
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X