இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டை பெரிய அளவில் பாதிப்பது எப்போதும் தங்கமும், ஆயுதங்களும் தான். தங்க இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தங்கத்துடன் நேரடியாகத் தொடர்புடைய முதலீட்டுத் திட்டங்களைப் பலவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதேபோல் ஆயுத இறக்குமதியைக் குறைப்பதற்காகப் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கப் பிரத்தியேகமாகத் திட்டங்களையும், வழிகளை மேக் இன் இந்தியா தீட்டத்தின் அறிமுகம் செய்யப்பட்டது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் சலுகையின் கீழ் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆயுதங்களை உற்பத்தி செய்ய முன்வந்தது. அந்த வகையில் இந்திய ராணுவ வீரர்கள் பயன்பாட்டுக்கு CAR 816 ரக அதிநவீனத் துப்பாக்கிகளைத் தயாரிக்க மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்தி பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2018ல் ஐக்கிய அரபு நாடுகளில் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமாகத் திகழும் Caracal-ஐ தேர்வு செய்தது.
இந்தக் காராகல் நிறுவனம் தற்போது 93,895 CAR 816 ரக அதிநவீனத் துப்பாக்கிகளை விநியோகம் செய்வதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
பெங்களூரில் டெஸ்லா அலுவலகம்..?! எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

காராகல்
மேக் இன் இந்தியா திட்டத்தின் ஐக்கிய அரபு நாடுகளில் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமாகத் திகழும் Caracal துப்பாக்கி தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைக்க நிலத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உற்பத்தி பணிகளை உடனடியாகத் துவங்க உள்நாட்டு நிறுனவ கூட்டணியையும் அமைத்துள்ளது காராகல் நிறுவனம்.

மேக் இன் இந்தியா
காராகல் நிறுவனத்தின் CAR 816 ரக அதிநவீனத் துப்பாக்கிகளைத் தயாரிப்பதில் 20 சதவீத உதிரி பாகங்கள் ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது, இந்நிலையில் கேம் இன் இந்தியா திட்டத்தின் கீழ் CAR 816 துப்பாக்கியை காராகல் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளது.
இதனால் நாட்டில் ஆயுத உற்பத்திக்கு வலிமையான அடித்தளம் அமைக்க முடியும்.

தொழில்நுட்ப பரிமாற்றம்
இந்த மேக் இன் இந்தியா டீல் மூலம் காராகல் நிறுவனத்தின் CAR 816 ரக அதிநவீன துப்பாக்கிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும், அதைச் சார்ந்த உற்பத்தி அறிவையும் இந்தியா பெற முடியும். இதனால் வரும் காலத்தில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான துப்பாக்கிகளை அதிகளவிலான மேம்பாடுகளுடன் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்க முடியும் என்பதே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கிடைக்கும் மிகப்பெரிய லாபம்.

12 மாதம்
துப்பாக்கி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் காராகல் நிறுவனம் 2018 டீல் மூலம் தற்போது தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுப்பட உள்ள நிலையில், அடுத்த 12 மாதத்திற்குள் இந்திய ராணுவத்திற்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட CAR 816 விநியோகம் செய்யப்படும் எனக் காராகல் நிறுவனத்தின் சிஇஓ Hamad Al Ameri தெரிவித்துள்ளார்.

மாற்று துப்பாக்கி
உற்பத்தி பணிகளைத் துரிதப்படுத்த முடிவு செய்துள்ள காராகல், CAR 816 துப்பாக்கிகளை விநியோகம் துவங்கிய பின்பு இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்தி வரும் 9mm Sterling carbines துப்பாக்கிகளை முழுமையாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.