அரசு ஊழியர்களுக்கு இப்படியொரு சலுகையா.. கொடுத்து வச்சவங்கப்பா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பொருளாதாரத்தைக் கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் தாண்டி பிற துறைகளில் வர்த்தகம், முதலீடு, வருவாய் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் வரவேற்பு மட்டும் அல்லாமல் நீங்க வந்தால் மட்டும் போதும் எனப் பாணியில் பல சலுகைகளை அளித்து வருகிறது.

இந்தத் திட்டங்களின் அடுத்தகட்ட முயற்சியாகச் சொந்த தொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஜனவரி 2, 2023 முதல் ஒரு வருட ஓய்வு விடுமுறையை (sabbatical leave) எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அளித்துள்ளது.

திருப்பூர் போடும் புதிய திட்டம்.. துபாய், ஜப்பான், ஆஸ்திரேலியா.. கைகொடுக்குமா..? திருப்பூர் போடும் புதிய திட்டம்.. துபாய், ஜப்பான், ஆஸ்திரேலியா.. கைகொடுக்குமா..?

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

அரசு பணியில் பணிபுரியும் போதே எமிராட்டிஸ் நாட்டினர் தங்களின் சொந்த தொழில்களைத் தொடங்குவதை ஊக்குவிப்பதற்காக ஜூலை மாதம் முதன் முதலில் 1 வருடம் ஓய்வு விடுமுறை வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்.

 1 வருடம் விடுமுறை

1 வருடம் விடுமுறை

உலகிலேயே முதல் முறையாக ஒரு நாடு அரசு ஊழியர்களுக்குச் சொந்த தொழில் துவங்க ஊக்குவிக்கும் வகையில் 1 வருடம் வரையில் ஓய்வு விடுமுறை அளிக்கும் திட்டத்தையும், இத்தகைய ஊக்குவிப்பையும் அளிக்கும் நாடு என்றால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான்.

 ஜனவரி 2 முதல்

ஜனவரி 2 முதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதே இந்தக் கொள்கையின் குறிக்கோள் என்று ஷேக் முகமது ஜூலை மாதம் கூறியிருந்தார். தற்போது ஜனவரி 2 முதல் இத்திட்டம் நடைமுறைக்குவர உள்ளது.

50 சதவீத சம்பளம்

50 சதவீத சம்பளம்

இந்த ஓய்வுக்கால விடுமுறையின் போது, எமிரேட்டிஸ் நாட்டினர் அவர்களின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்தைப் பெறுவார்கள். அந்த நபர் பணிபுரியும் அரசு அமைப்பின் தலைவரால் விடுப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். மேலும் இந்த ஓய்வு விடுமுறையின் காலத்தில் வருடாந்திர விடுமுறை நாட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஹியூமன் ரிசோர்ஸ்

ஹியூமன் ரிசோர்ஸ்

ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் கவர்ன்மென்ட் ஹியூமன் ரிசோர்ஸ் இணையதளமான www.fahr.gov.ae -ல் அந்நாட்டு அரசு அமைப்புகளில் பணிபுரியும் UAE குடிமக்களுக்குச் சொந்தமாகத் தொழில் துவங்க ஒரு வருட விடுமுறையைப் பெறுவதற்கான தேவைகள் மற்றும் முன்னிபந்தனைகள் பற்றிய முழுமையான தகவல்களைப் பட்டியலிடப்பட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் போதுமான நிதி இருக்கும் வேளையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகம் வாய்ப்பை அளிப்பதை விடவும் அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக அரசு நடைமுறைகள் நன்றாகத் தெரிந்த அரசு அதிகாரிகளுக்குத் தொழில் துவங்க வாய்ப்பு அளிக்கும் போது கூடுதல் நன்மை எமிரேட்ஸ் மக்களுக்கும் அரசுக்கும் கிடைக்கும்.

புதிய முயற்சி

புதிய முயற்சி

ஆனால் அரசு ஊழியர்கள் மட்டத்தில் இருந்து தொழில் துவங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் 1 வருடம் வரையில் விடுப்பு கொடுத்து முயற்சிகளைத் தொடர வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியத் திட்டமாக இல்லை என்றால் கூடக் கட்டாயம் நீண்ட கால அடிப்படையில் உதவும்.

ரஷ்யா ஓகே சொல்லிட்டாங்க.. UAE உடன் டீல் போடும் இந்தியா..? ரஷ்யா ஓகே சொல்லிட்டாங்க.. UAE உடன் டீல் போடும் இந்தியா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UAE Govt gives 1 year sabbatical leave for govt employees to start a business

UAE Govt gives 1 year sabbatical leave for govt employees to start a business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X