வெறும் 6 கிமீ 32 லட்சம் கட்டணம்.. ஆடிப்போன உபர் பயணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரில் ஆன்லைன் புக்கிங் தளத்தின் மூலம் புக் செய்யப்படும் ஆட்டோவுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என அதிகப்படியான புகார்கள் வந்த நிலையில், கர்நாடக போக்குவரத்துத் துறை ஓலா, உபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களை 3 நாட்களில் ஆட்டோ சேவையை நிறுத்திவிட உத்தரவிட்டு உள்ளது.

மேலும் ஓலா, உபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்குக் கார்கள் மூலம் டாக்சி சேவை அளிக்க மட்டுமே அனுமதி உண்டு, 3 சக்கர வாகனங்களில் இத்தளத்தின் மூலம் டாக்சி சேவை அளிக்க உரிமை இல்லை என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உபர் நிறுவனம் வெறும் 6 கிமீ பயணத்திற்குச் சுமார் 32 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ சேவை நிறுத்தம்.. உபர், ஓலா-வுக்குக் கர்நாடக அரசு நோட்டீஸ்.. ஏன்..?ஆட்டோ சேவை நிறுத்தம்.. உபர், ஓலா-வுக்குக் கர்நாடக அரசு நோட்டீஸ்.. ஏன்..?

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டைத் தேர்ந்த 22 வயதான ஆலிவர் கப்லான் ஹைட் பகுதியில் இருந்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் இருக்கும் லைன் பகுதிக்கு உபர் டாக்சி மூலம் தனது நண்பர்களுடன் இணைந்து சரக்கு பார்ட்டி கொண்டாட சென்றுள்ளார்.

ஆலிவர் கப்லான்

ஆலிவர் கப்லான்

ஆலிவர் கப்லான் போஸ்ட்பெய்டு பேமெண்ட் முறையில் கட்டணத்தைச் செலுத்துவதால் அப்போது எவ்வளவு கட்டணம் என்பதைக் கவனிக்கவில்லை. ஆனால் பார்ட்டி முடிந்து காலையில் பில்-ஐ பார்த்தால் ஆடிப்போய் உள்ளார்.

32 லட்சம் ரூபாய்
 

32 லட்சம் ரூபாய்

ஆலிவர் கப்லான், வெறும் 6.4 கிலோமீட்டர் தொலைவு, 15 நிமிட பயணத்திற்கு உபர் போட்டு உள்ள கட்டணம் 35,427.97 பவுண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம் ரூபாய். இதில் அதிர்ச்சி அடைந்த ஆலிவர் உபர் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் நிறுவனத்திற்கு அழைத்துள்ளார்.

உபர் நிறுவனம்

உபர் நிறுவனம்

முதலில் அதிர்ச்சி அடைந்த உபர் நிறுவனம் பின்பு காரணத்தைக் கண்டுபிடித்தது, ஆல்வர் கப்லான் தனது டிராப் லொகேஷன்-ஐ ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு பகுதியில் உள்ள லைன் பகுதிக்கு மார்க் செய்துள்ளார். இது கிட்டதட்ட 16000 கிலோமீட்டர் என்பதால் 35,427.97 பவுண்ட் கட்டணத்தைக் காட்டியுள்ளது என உபர் விளக்கம் கொடுத்துள்ளது.

10.73 பவுண்ட் மட்டுமே

10.73 பவுண்ட் மட்டுமே

இதன் பின்பு உபர் நிறுவனம் டார்ப் லொகோஷனை சரியான இடத்திற்கு மார்க் செய்து 10.73 பவுண்ட் தொகையை மட்டும் வசூலித்துள்ளது. முதலில் இந்தத் தொகையை எடுக்க முடியாததிற்கு முக்கியக் காரணம் ஆலிவர் கப்லான் கணக்கில் 35,427.97 பவுண்ட் இல்லை, அப்படிப் பணம் இருந்திருந்தால் எடுக்கப்பட்டு இருக்கக் கூடும்.

டிரெண்ட்

டிரெண்ட்

இந்தச் சம்பவம் பிரிட்டன் முழுவதும் வைரலாகியிருப்பது மட்டும் அல்லாமல் ஆலிவர் கப்லான் முகம் தற்போது அனைத்து செய்தித்தாள், டிவி சேனல்களிலும் வர துவங்கியுள்ளது. காரணம் அனைத்துத் தரப்பு மக்களும் உபர் கார் சேவையைப் பயன்படுத்தும் காரணமாக இதுப்போன்ற சம்பவம் அனைவருக்கும் நடக்க வாய்ப்பு இருக்கும் காரணத்தால் இந்தச் சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: uber உபர்
English summary

Uber charged Rs 32 lakh for just 6.4 kms trip; Man Shocked but saved

Uber charged Rs 32 lakh for just 6.4 kms trip; Man Shocked but saved
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X