ஆபத்தில் உதவிய உபர் டிரைவர்.. கொரோனாவால் தாய் தவிப்பு.. பதறிய மகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றால் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது, ஆனால் உதவியென யாராவது கேட்டால் தங்களால் முடிந்த உதவிகளை அனைவரும் செய்து வரும் நிலைக்கு மக்கள் மனம் மாறியுள்ளது.

இந்த நிலையில் கொரோவால் பாதிக்கப்பட்டு உள்ள தாய் மகளுக்கு டக்கென உதவியுள்ளார் உபர் டாக்ஸி டிரைவர். இதுகுறித்த பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவுக்குக் கொரோனா பாசிடிவ்

அம்மாவுக்குக் கொரோனா பாசிடிவ்

அம்மாவுக்குக் கொரோனா பாசிடிவ் திடிரென உடலில் ஆக்சிஜன் அளவு 80 சதவீதம் வரையில் குறைந்தது, வீட்டில் ஒரு சிலிண்டர் மட்டுமே இருக்கும் காரணத்தால் கட்டாயம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

ஆம்புலன்ஸ் இல்லை

ஆம்புலன்ஸ் இல்லை

இதனால் செய்வதறியாமல் நண்பர்களிடம் உதவி கேட்டேன். பலரின் முயற்சியால் ஒரு மருத்துவமனையில் ஏப்ரல் 28ஆம் தேதி ஆக்சிஜன் உடன் படுக்கை கிடைத்தது. மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸ் எண்களுக்குத் தொடர்ந்து அலைத்தேன். ஒருவர் கூடக் கிடைக்கவில்லை.

ஆக்சிஜன் அளவு சரிவு

ஆக்சிஜன் அளவு சரிவு

மருத்துவமனை கிட்டதட்ட 40 கிலோமீட்டர் என்பதால் கட்டாயம் வாகனம் தேவை, நேரம் கூடக் கூடச் சிலிண்டரில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்ட இருக்கிறது. கட்டாயம் மருத்துவமனை அடைவதற்குள் ஆக்சிஜன் முழுமையாகத் தீர்ந்துவிடும்.

உபர் டாக்ஸி

உபர் டாக்ஸி

எனவே வேறு வழி இல்லாமல் உபர் டாக்ஸி-யை புக் செய்தேன், 4 பேர் தொடர்ந்து ரத்து செய்தனர், 5வது ஆக ஒருவர் ஓட்டுநர் புக் ஆனார், உடனே உபர் கார் ஓட்டுநரை அழைத்து நீங்கள் கேன்சல் செய்கிறீர்கள் என்றால் இப்போதே சொல்லவிடுங்கள்.

கொரோனா உடன் 12வது நாள்,

கொரோனா உடன் 12வது நாள்,

15-20 காத்திருப்புக்கு பின் நீங்கள் கேன்சல் செய்தால் எனக்கு மீண்டும் நான் புக் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் ரிதுபர்னா, பொறுமையாகக் கேட்ட டிரைவரிடம் என் அம்மாவுக்கும் எனக்கும் கொரோனா இது 12வது நாள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுத்துள்ளோம்.

வேறு வழியே இல்லை

வேறு வழியே இல்லை

என்னிடம் கார் இல்லாத காரணத்தால் வேறு வழியே இல்லாமல் உபர் காரை புக் செய்துள்ளேன், அம்மாவின் ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என ரிதுபர்னா கூறிய பின் உபர் ஓட்டுநர் சொன்ன பதிலும், காட்டிய கரிசனமும் அளவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

3 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்

3 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்

ரிதுபர்னா பேசிய பின் கவலைப்படாதீங்க அடுத்த 3 முதல் 4 நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருப்பேன் கூறி அவர் விரைவில் வந்தது மட்டும் அல்லாமல், அடுத்த நாள் ரிதுபர்னா-விடம் அம்மா எப்படி இருக்கிறார் எனக் கேட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனக் கூறியதற்குக் கவலைப்பட வேண்டாம் விரைவில் குணமடைவார் எனக் கூறியுள்ளார் அந்த உபர் ஓட்டுனர்.

உதவி வேண்டுமா..?!

உதவி வேண்டுமா..?!

உபர் டிரைவர் டிரிப் முடித்த அடுத்த நாள் நலம் விசாரித்தது மட்டும் அல்லாமல், என்னால் எதாவது உதவி வேண்டும் என்றால், தயங்காமல் கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.

தன்னம்பிக்கையைத்

தன்னம்பிக்கையைத்

தனிப் பெண்ணாக இருப்பவர்களுக்கு அதுவும் கொரோனா தொற்று பாதித்துள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற நபர்கள் தான் தன்னம்பிக்கையை அளிக்கின்றனர். கொரோனா மக்களை நெருங்க இணைத்துள்ளது என்றால் மிகையில்லை.

அனைவருக்கும் சல்யூட்

அனைவருக்கும் சல்யூட்

ரிதுபர்னா போட்ட இந்தப் பதிவுக்கு இதுவரை 5,562 பேர் லைக் செய்து வைரலாகி வருகிறது. கொரோனா தொற்றில் பல ஆன்லைன் சேவை நிறுவனங்கள் இரவு பகல் பாராமல் இயங்கி வருகிறது. மேலும் பல லட்சம் மக்கள் ரிஸ்க் எனத் தெரிந்தும் மக்களுக்கு இடைவிடாமல் சேவை அளித்து வருகின்றனர். புட் டெலிவரி முதல் மருத்துவமனையில் குறைந்த விலைக்கு உணவு விற்பவர் வரை அனைவருக்கும் சல்யூட்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber driver with exceptional heart helped mother and daughter in covid times

Uber driver with exceptional heart helped mother and daughter in covid times
Story first published: Thursday, May 13, 2021, 22:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X