Uber நிறுவனத்தில் சரமாரி லே ஆஃப்..! சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் CEO!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலகம் முழுக்க, இது நாள் வரை சுமாராக 37.24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 2.58 லட்ச பேர் மரணித்து இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உயிரை உறிஞ்சிக் கொள்வது ஒரு பக்கம் இருக்க, தற்போது தனி மனிதர்களின் வாழ்கையையும் முழுமையாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

மக்கள்

மக்கள்

நடுத்தர மக்களுக்கு, அவர்களின் வேலையைப் பறித்து விடுவேன் என பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. சம்பளத்தை வெட்டி விடுவேன் என எச்சரிக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு, அவர்களின் அன்றாட வேலை வாய்ப்புகளைப் பறித்து, அவர்களை அம்போ என நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறது.

உபர்

உபர்

கொரோனா வைரஸின் கோரமான பார்வை தற்போது உலகம் முழுக்க, அப்ளீகேஷன் வழியாக கட்டி ஆளும், டாக்ஸி கம்பெனியான உபர் மீதும் விழுந்து இருக்கிறது. கொரோனாவால், கம்பெனியில் சரமாரியாக லே ஆஃப் செய்ய இருக்கிறார்களாம். அதோடு சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

லே ஆஃப்
 

லே ஆஃப்

உபர் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஆட்களை எடுக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்களை லே ஆஃப் செய்து இருக்கிறார்களாம். இதனால் உபர் நிறுவனத்துக்கு சுமாராக 20 மில்லியன் டாலர் மிச்சமாகுமாம்.

கணிப்புகள்

கணிப்புகள்

உபர் மற்றும் அதன் போட்டி நிறுவனமான லிஃப்டி, தங்களின் நிதி கணிப்புகளை முழுமையாக பின் வளித்து இருக்கிறார்கள். உலகம் முழுக்க, பல நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதால், தங்கள் ஆப்பை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டாக்ஸி வியாபாரம் மிகவும் டல்லடித்து இருக்கிறதாம்.

கொஞ்சம் தப்பிக்கலாம்

கொஞ்சம் தப்பிக்கலாம்

உபர் நிறுவனம், டாக்ஸி சேவைகளைத் தாண்டி உணவு டெலிவரி வேறு செய்வதால், கொஞ்சமாவது இழந்த வருவாயை ஈட்ட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இந்த நேரத்தில் இன்று அமெரிக்காவின் நியூ யார்க் பங்குச் சந்தையில் உபர் நிறுவன பங்குகள் விலை சுமாராக 3.3 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber is going to cut 3700 jobs CEO going to waive his base salary

The uber taxi company is going to cut 3700 jobs CEO going to waive his base salary for the remaining year.
Story first published: Wednesday, May 6, 2020, 22:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X