பெங்களூர் மக்களுக்கு இன்னொரு ஷாக்.. விரைவில் கட்டணம் அதிகரிக்கலாம்.. உபர் சொல்லும் காரணத்த பாருங்க

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உபர் நிறுவனம் கொரோனாவுக்கு பிறகு தேவையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் பயணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. எனினும் பணவீக்கம் காரணமாக செலவினங்களும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில் பெங்களூரில் டாக்சி சேவையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கடந்த மாதம் பெரும் சர்ச்சையே வெடித்தது.

கால் டாக்சி, ஆட்டோ சேவை நிறுவனங்கள் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் செலவை கட்டுப்படுத்த, கட்டாயம் கட்டணம் அதிகரிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

உபர் டிரைவர் அலட்சியம்.. விழுந்தது அபராதம்.. மாட்டிக்கொண்ட அமெரிக்க நிறுவனம்..! உபர் டிரைவர் அலட்சியம்.. விழுந்தது அபராதம்.. மாட்டிக்கொண்ட அமெரிக்க நிறுவனம்..!

கர்நாடகாவில் எப்படி?

கர்நாடகாவில் எப்படி?

இந்தியா முழுவதும் பல நகரங்களில் உபர் நிறுவனம் டாக்சி சேவையினை வழங்கி வந்தாலும், கர்நாடகாவில் தொடர்ந்த பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது. சமீபத்தில் பெங்களூரில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி பல புகார்கள் எழுந்தன. இதனால் அனைத்து டாக்சி சேவை நிறுவனங்களுக்கும் சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

கட்டணம் அதிகம்

கட்டணம் அதிகம்

இது சாதாரண டாக்சிகளை விட, உபெர் ஓலாவில் கட்டணம் அதிகம் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக கர்நாடகாவில் ஓலா, உபர், ரேபிட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களது சேவையை நிறுத்துமாறு, அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.

கர்நாடகா அரசுக்கு எதிராக வழக்கு

கர்நாடகா அரசுக்கு எதிராக வழக்கு

எனினும் அதன் பின்னர் கர்நாடக அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்த நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து ஓலா, உபர் நிறுவனங்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக அரசு ஓலா, உபர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதில் இறுதி முடிவெடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

10% கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்

10% கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்

அது மட்டும் அல்ல, கட்டணம் குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் வரை, அரசு நிர்ணயித்த தொகையை விட 10% கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால் இது நிதி ரீதியாக நிலையானது அல்ல. எங்கள் செலவுகள் மற்றும் கமிஷன்கள் மூலம் ஈடுகட்ட முடியாவிட்டால் ஒட்டுனர்கள் மற்றும் ரைடர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பெங்களூரின் சில பகுதிகளில் எங்கள் சேவையை மட்டுப்படுத்த வேண்டிய கடினமான முடிவை நாங்கள் எடுக்க வேண்டி உள்ளது.

செலவுகள் அதிகம்

செலவுகள் அதிகம்

அக்டோபர் 14 அன்று கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா போக்குவரத்து துறைக்கும், டாக்சி சேவையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை கண்டறிய வேண்டும், அதுவரையில் ஜிஎஸ்டி தவிர்த்து 10% கூடுதல் வரம்புக்கு அனுமதி கொடுத்தது.

ஆனால் உபர் கமிஷனில் ஜிபிஎஸ் பாதுகாப்பு சேவை, பாதுகாப்பு ஹெல்ப்லைன், 24 மணி நேர தொலைபேசி சேவை, நேரில் வழங்கும் சேவை, ஓட்டுனர்களுக்கான இன்சூரன்ஸ், ரைடர்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளது.

எங்கள் கமிஷனே எங்கள் லாபம்

எங்கள் கமிஷனே எங்கள் லாபம்

ஆக சந்தையில் செலவினங்கள் அதிகம். கிடைக்கும் கமிஷன் மூலமே இத்தகைய செலவினங்களை செய்ய வேண்டியுள்ளது. எங்கள் கமிஷனே எங்கள் லாபம். நெகிழ்வான கமிஷன் அமைப்பு இருக்க வேண்டும். இது நியாயமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷனை உறுதி செய்யும். இதுவே டாக்சி நிறுவனங்களின் வளர்ச்சியினை உறுதி செய்யும் என்றும் உபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமானதாக இல்லை

போதுமானதாக இல்லை

அறிக்கையின் படி 50,000-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுனர்கள் உபரை பயன்படுத்துகின்றனர். நகரத்தில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்திற்க்லும் அதிகமாக மக்கள் உபரை பயன்படுத்துகின்றனர். தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் போதுமானதாக இல்லை என்றும் நிறுவனம் ஒரு வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.

 கட்டணம் அதிகரிக்கலாம்

கட்டணம் அதிகரிக்கலாம்

மொத்தத்தில் டாக்சி நிறுவனங்கள் ஒன்று கட்டணத்தினை உயர்த்தியாக வேண்டும் அல்லது சேவையை நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் உள்ளன என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: uber உபர்
English summary

Uber may restrict taxi services in some places in Bangalore: 10% commission cap unviable

Taxi companies like Uber may be forced to either raise fares or stop service
Story first published: Wednesday, November 2, 2022, 11:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X