UBER: 50 கிமீ-க்கு ரூ.3000 கட்டணம்..? இதுக்கு பிளைட்லயே போயிரலாமே! அதிர்ச்சியில் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓலா, உபர் போன்ற கேப் நிறுவனங்கள் பெரும்பாலும் நியாயமான கட்டணத்தை பெற்றாலும் ஒரு சில நேரங்களில் திடீரென வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் அளவுக்கு கட்டணத்தை பெறுகிறது.

இது குறித்து ஏற்கனவே பல வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் இதுகுறித்து தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய வீட்டிற்கு 50 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில் 3000 ரூபாய் உபர் கட்டணமாக கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 ஓலா - உபர்

ஓலா - உபர்

தற்போதைய டிராபிக் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் செல்வதைவிட ஓலா, உபர் போன்ற தனியார் கேப் நிறுவனத்தில் செல்வதை பலர் விரும்புகின்றனர். நியாயமான கட்டணம், விரைவில் செல்ல வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற முடிவை வாடிக்கையாளர்கள் பலர் எடுக்கின்றனர். ஆனால் ஒருசிலருக்கு விரும்பத்தகாத அனுபவங்களை ஏற்படுகிறது.

மும்பை வாடிக்கையாளர்

மும்பை வாடிக்கையாளர்

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஷ்ரவன்குமார் சுவர்ணா என்பவர் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல விரும்பினார். அவர் இருக்கும் இடத்தில் இருந்து வீட்டுக்கு 50 கிலோ மீட்டர் மட்டுமே இருந்த நிலையில் உபேர் கால் டாக்ஸி புக் செய்தபோது அதற்கு ரூ.3000 கட்டணம் என்று காட்டியது. உடனே ஷ்ரவன்குமார் சுவர்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கட்டணம்

கட்டணம்

உபர் செயலியில் காட்டிய கட்டணத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ஷ்ரவன்குமார் சுவர்ணா, உபர்கோ கட்டணம் ரூ. 3,041 என்றும், பிரீமியர் கட்டணம் ரூ. 4,081, மற்றும் உபர் XL ரூ. 5,159 கட்டணம் என்றும் காட்டியதை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்தார்.

 விமான கட்டணம்

விமான கட்டணம்

நான் இருக்கும் இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனது வீட்டிற்கு செல்வதை விட இங்கிருந்து கோவாவிற்கு விமானத்தில் செல்வது மிகவும் மலிவானது என்று ஷ்ரவன்குமார் சுவர்ணா தனது ட்விட்டரில் நகைச்சுவையுடன் தெரிவித்திருந்தார். அவரது இந்த ட்விட்டுக்கு பலர் லைக் செய்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் பயனாளிகள்

ட்விட்டர் பயனாளிகள்

இதுகுறித்து ஒரு ட்விட்டர் பயனாளி, 'இது போன்று சில சவாரிகள் செய்வதை தவிர்த்தால், அந்த பணத்தை மிச்சப்படுத்தி புறநகரில் ஒரு சொந்த வீடே வாங்கிவிடலாம் என்று தெரிவித்திருந்தார். என்னதான் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வந்தாலும் 50 கிலோ மீட்டருக்கு ரூ.3000 என்பது மிக அதிகம் என்றும் அதிகபட்சமாக 500 ரூபாய் கட்டணம் கேட்டு இருக்கலாம் என்றும் மற்றொரு டுவிட்டர் பயனாளி கருத்து தெரிவித்துள்ளார்.

கேன்சல்

கேன்சல்

கட்டணம் காண்பிப்பதில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம் என்றும் அந்த ரைடை கேன்சல் செய்து விட்டு மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள் என்றும் இன்னொரு டுவிட்டர் பயனாளி அறிவுரை கூறியிருந்தார்.

11 கிமீக்கு ரூ.10,413

11 கிமீக்கு ரூ.10,413

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஒருவருக்கு இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் 11 கிமீ தூரம் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உபேர் டாக்ஸி புக் செய்தபோது அவருக்கு 10, 413 ரூபாய் கட்டணமாக காட்டியது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber shows Rs 3,000 fare for 50 km ride Mumbai customer shocked!

Uber shows Rs 3,000 fare for 50 km ride.. Mumbai customer shocked! | உபர் டாக்சியில் 50 கிமீக்கு ரூ.3000 கட்டணமா? இதுக்கு பிளைட்லயே போயிரலாமே!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X