நீங்க 2,000 பேரும் வீட்டுக்கு போகலாம்.. அதிரடி முடிவெடுத்த உதான்.. கதறும் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பி2பி காமர்ஸ் நிறுவனமான ஸ்டார்டப் நிறுவனமான உதான் காமர்ஸ் நிறுவனம், விற்பனை, சந்தைப்படுத்துதல், செயல்பாடுகள் மற்றும் கடன் வசூல் போன்ற பல்வேறு வணிகப் பாத்திரங்களில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இது குறித்த பெயரினை குறிப்பிட விரும்பாத நான்கு ஊழியர்கள் தெரிவித்ததாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.

உதான் என்பது ஒரு ஆன்லைன் சந்தையாகும். இது உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கவும் விற்கவும் பயன்படுகிறது.

என்ன செய்கிறது?

என்ன செய்கிறது?

குறிப்பாக பேஷன் பொருட்கள், மளிகை பொருட்கள், மின்னணுவியல், பொருட்களை வாங்கவும் விற்கவும் உதவுகிறது. இது கடந்த 2016ல் நிறுவப்பட்டது. தற்போது 900 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒப்பந்த ஊழியர்கள் பெரும்பாலும் உதானுக்கு ப்ளீட் ஆன் ஸ்ட்ரீட் ஆக செயல்பட்டனர். இது கிரானா ஸ்டோர் பிரிவில் வாங்குபவர்களையும் சப்ளையர்களை இணைக்க உதவுகிறது.

வணிகத்தில் பெரும் வீழ்ச்சி

வணிகத்தில் பெரும் வீழ்ச்சி

பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த யூனிகார்ன் நிறுவனம் தற்போது அதன் பங்காளிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஆர்டர்களை வழங்குகிறது. இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக உதான் அத்தியாவசிய பொருட்களுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரானிக்ஸ், சமையலறை பாகங்கள் மற்றும் பிறவற்றின் அத்தியாவசியமற்ற பிரிவுகளின் கீழ் வணிகத்தில் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்?

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்?

இதற்கிடையில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் உக்கிரம் எடுத்து ஆடி வரும் நிலையில், எப்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் மே 3க்கு பிறகும் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என்ற நீடித்த நிலையே இருந்து வருகிறது, இது பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியினை காண வழிவகுக்கும்.

பணி நீக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம்?

பணி நீக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம்?

இதற்கிடையில் தான் உதான் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் உதானின் ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெயர் வெளீயிட விரும்பாத ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களை வாட்டி வதைத்து வரும் இந்த கொடிய கொரோனா வைரஸின் காரணமாக நாங்கள் இப்படியொரு நடவடிக்கைகாக நிர்பந்திக்கப்படுகிறோம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Udaan lay off over 2,000 cotractual employees amid coronavirus pandemic

B2B commerce start up Udaan lay off over 2,000 cotractual employees amid coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X