சமீபத்திய மாதங்களாக ஸ்டார்ட் அப்களில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செலவினைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது ஸ்டார்ட் அப் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
உடான் அதிரடி
அந்த வகையில் தற்போது பிசினஸ் டூ பிசினஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான உடான் நிறுவனம் 180 - 200 பேரை, அல்லது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்கமானது அசாதாரணமான நிலை என்றும் கூறியுள்ளது.
வளர்ச்சியை மேம்படுத்த திட்டம்
இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல், நிறுவனத்தின் வளர்ச்சியினை உறுதிபடுத்தியுள்ளார்.
சந்தையை மேம்படுத்த நாங்கள் எங்கள் வணிக மாதிரியையும், சுறுசுறுப்பாக மாற்றியமைத்து வருகிறோம். இது வாடிக்கையாளரை மையமாக கொண்டதாகவும், வலுவான வணிக மாதிரியாகவும் மாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
செலவு குறைப்பு நடவடிக்கை
நாங்கள் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம். இதில் தேவையில்லாத சில பாத்திரங்களை நீக்கி, சிலவற்றை சேர்த்தும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கம்
கடைசியாக இந்த பணி நீக்க நடவடிக்கையானது 2021ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனம் நேர்மறையான பங்களிப்பு வரம்பை எட்டியது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய நடப்பு காலாண்டில் யூனிட் எக்னாமிக்ஸ் பாசிட்டிவ் ஆக இருப்பதாகவும் தலைமை நிர்வாகி வைபவ் குப்தா, தனது ஊழியர்களிடம் உள்ள உள்குறிப்பில் கூறியதன் பின்னணியில் இந்த பணி நீக்கங்கள் வந்துள்ளன.
சமீபத்திய பணி நீக்கங்கள்
அன் அகாடமி - 1000 பேர்
வேதாந்து - 624 பேர்
கார்ஸ் 24 - 600 பேர்
எம்பைன் - 500 பேர்
ட்ரெல் - 300 பேர்
லிடோ - 200 பேர்
ரூபிக் - 200 பேர்
உடான் - 180 - 200பேர்
சிட்டிமால் - 191
Furlenco - 180
மீஸோ - 150
பிரண்ட்லோ - 145
எம்பிஎல் - 100
ஒகேகிரெடிட் - 35 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளன.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications