இன்போசிஸ் மூலம் மீண்டும் ரிஷி சுனக்-கிற்கு பிரச்சனை..? இன்னும் ரஷ்யா-வில் தொடர்வது ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், ரஷ்யாவில் தங்களது செயல்பாட்டினை நிறுத்துவதாக அறிவித்தன. பல நிறுவனங்களும் ரஷ்யாவினை வெளியிட்டு வந்தன.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனது, சேவையினை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்தது.

இது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவுக்கு தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது மீண்டும் இந்த பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

ஐடி ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. Accenture எடுத்த அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம் தெரியுமா..? ஐடி ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. Accenture எடுத்த அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம் தெரியுமா..?

ரஷ்யாவில் இருந்து வெளியேறியதா?

ரஷ்யாவில் இருந்து வெளியேறியதா?

சர்வதேச அளவிலான டெக் ஜாம்பவான்கள் கூட, ரஷ்யாவில் இருந்து தங்களது வணிகத்தினை நிறுத்தி வரும் நிலையில், இன்ஃபோசிஸ்-ன் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின.

CEO-ன் விளக்கம்

CEO-ன் விளக்கம்

இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சலீல் பரேக், அந்த சமயத்தில் ரஷ்ய நிறுவனங்களுடன் முன்னோக்கி செல்ல எந்த திட்டமும் இல்லை. அதோடு இன்ஃபோசிஸ் தனது சேவைகளை ரஷ்யாவுக்கு வெளியே மாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

உலகளாவிய நிறுவனங்களின் பணி
 

உலகளாவிய நிறுவனங்களின் பணி

மேலும் இன்ஃபோசிஸ் ரஷ்யா அலுவலகத்தில் 100 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறிய சலீல், நாங்கள் எந்த ரஷ்ய நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. ரஷ்யாவில் தற்போது இருக்கும் சில பணிகள் உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் தொடர்புடையது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட அழுத்தம் தான் காரணமா?

ரிஷி சுனக்கிற்கு ஏற்பட்ட அழுத்தம் தான் காரணமா?

இது ரஷ்யாவுக்கு எதிர்ப்பினை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் எதிர்கொண்ட அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை இருக்கலாமோ? என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போதும் ரஷ்யாவில் இயக்கம்

தற்போதும் ரஷ்யாவில் இயக்கம்

இத்தகைய சூழலில் தற்போது வரையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் ரஷ்யாவில் இயங்கி வருவதாகவும் கேள்வி எழுந்துள்ளது. இது ரிஷி சுனக்கிற்கு மேற்கொண்டு அழுத்தமாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி வருடாந்திர ட்விடெண்டினை மிகப்பெரிய அளவில் பெற்றுள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

தகவல்கள் படி,இன்ஃபோசிஸ் இன்னும் ரஷ்யாவில் இயங்கி வரும் நிலையில், அலுவலகத்தினை கொண்டுள்ளது. உலகளாவிய ஐடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது இங்கிலாந்தின் பிரதமராகியுள்ள ரிஷி சுனக், பிரதமராகும் முன்பே இந்த சர்ச்சை வெடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 794 மில்லியன் டாலர் மதிப்புள்ள 0.93% பங்கினை அக்ஷதா மூர்த்தியின் மூலம், தற்போது ரிஷி சுனக்கிற்கு வந்துள்ளது. இதன் மூலம் ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தி தம்பதி, பிரிட்டீஷ் இரண்டாம் ராணி எலிசபெத்தை விட செல்வந்தராக இருப்பதாக கூறப்படுகிறது. இது பிரீட்டீஸ் மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்ஃபோசிஸ் ரஷ்யா பிரச்சனையால், ரிஷி சுனக் மீண்டும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK Prime Minister Rishi Sunak gets more trouble from Infosys Russia again

Infosys is still operating in Russia, its adding further pressure to Rishi Sunak:sources say
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X