மாஸ்ஸான அறிவிப்பை வெளியிட்ட ரிஷி சுனக்.. பாராட்டி தள்ளும் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு துவங்கியதும் ஐஎம்எப் அமைப்பின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா 2023 ஆம் ஆண்டு மிகவும் கடுமையாக இருக்கும் எனவும், உலகில் 3ல் ஒரு பங்கு நாடுகள் 2023ல் ரெசிஷனுக்குள் நுழையும் என கூறியுள்ளார்.

 

இது மட்டும் அல்லாமல் 2023ல் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா ஆகிய முக்கிய பொருளாதார நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையை அடைய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த சர்வதேச சந்தை முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்.

சர்வதேச பொருளாதார வளர்ச்சியை குறைத்த ஐஎம்எப்.. ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை..! சர்வதேச பொருளாதார வளர்ச்சியை குறைத்த ஐஎம்எப்.. ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை..!

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

2023 ஆம் ஆண்டில் ரெசிஷன் அச்சம் உலகம் முழுவதும் அதிகமாக இருக்கும் நிலையில் மக்களின் நிலை மிகவும் மோசமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் வாழ்க்கை விலைவாசி உயர்வின் காரணமாக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மோசமாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு உதவும் விதமாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டில் உள்ள கோடிக் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிலையை மேம்படுத்தும் விதமாக, அடுத்த ஒரு நிதியாண்டில் அரசிடம் இருந்து சுமார் 900 பவுண்டு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 90000 ரூபாய் அளவிலான தொகையை உதவி தொகையாக அளிக்க முடிவு செய்துள்ளது ரிஷி சுனக் அரசு.

900 பவுண்ட் நிதி உதவி
 

900 பவுண்ட் நிதி உதவி

இந்த 900 பவுண்ட் நிதி உதவி குறைந்த வருமானம் கொண்ட பிரிட்டன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் அதிகரித்துள்ள விலைவாசிகள், எரிபொருள், மின்சார செலவுகளுக்கான ஆதரவாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

 மூன்று பேமெண்ட்

மூன்று பேமெண்ட்

இந்த 900 பவுண்ட் உதவி தொகையை நடப்பு நிதியாண்டில் மூன்று பேமெண்ட் ஆக பணத்தை நேரடியாக இந்த உதவி தொகை பெற தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் என்று பிரிட்டன் நாட்டின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெர்மி ஹன்ட்

ஜெர்மி ஹன்ட்

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 900 பவுண்ட் அளவிலான நிதியுதவியை அந்நாட்டின் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தனது இலையுதிர் கால நிதி அறிக்கையில் வரி அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்ட பொதுச் செலவுகள் அறிவிப்புகள் உடன் சேர்த்து அறிவித்தார்.

பிரிட்டன் நிதி நிலை

பிரிட்டன் நிதி நிலை

மேலும் இந்த 900 பவுண்ட் தொகை எப்போது மக்களுக்கு அளிக்கப்படும் என்பது குறித்த கால அட்டவணை விவரங்களை பிரிட்டன் அரசு தற்போது அறிவிக்கவில்லை. பிரிட்டன் நாட்டின் நிதி நிலை மோசமாக இருக்கும் வேளையில் சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த உதவி தொகையை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிற நிதியுதவிகள்

பிற நிதியுதவிகள்

இந்த 900 பவுண்ட் நிதியுதவி மட்டும் அல்லாமல் 60 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 150 பவுண்டுகளும், 80 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு 300 பவுண்டுகளும் வழங்கப்படும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

 1200 பவுண்ட்  நிதி உதவி

1200 பவுண்ட் நிதி உதவி

பிரிட்டன் அரசு கடந்த ஆண்டு 1200 பவுண்ட் மதிப்பிலான நிதி உதவியை low income families-க்கு அளிக்கப்பட் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டின் நிதிநிலை வர்த்தக போக்கு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் 900 பவுண்டுகளாக குறைக்கப்பட்டு ரிஷி சுனக் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து அளிப்பது மூலம் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK Rishi Sunak Govt announces 900 pound cash support for low-income families

UK Rishi Sunak Govt announces 900 pound cash support for low-income families, UK Chancellor Jeremy Hunt announces 900 pound cash support in his Autumn statement along with 150 pounds cash support for disabled people, 300 pounds cash support for pensioners.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X