ஆதித்யா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.
இது இந்தியாவின் முன்னனி சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். நாட்டில் கட்டுமான வளர்ச்சி அதிகரித்து வர வர இந்த நிறுவனம் தனது திறனை படிப்படியாக விரிவாக்கம் செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் அதன் திறனை அதிகரிக்க 5,477 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய உள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், உள்கட்டமைப்பு துறையில் இந்த முதலீடு முக்கிய பங்கு வகிக்கும். உள்கட்டமைப்பு மீதான அரசாங்கத்தின் உந்துதலின் பின்னணியில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் தனி நபர் வீடு கட்டுபவர்களிடமிருந்து வரும் கோரிக்கையின் பின்னணி, கொரோனாவுக்கு பின்பு ஆரோக்கியமான வளர்ச்சியினை கண்டு வருகிறது.
ஆக சிமெண்ட்டின் தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில் அல்ட்ராடெக் சிமெண்ட் நன்கு நிலை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தில் ராஜஸ்தானின் பாலி என்ற இடத்தில் உள்ள சிமெண்ட் ஆலையும் அடங்கும். அதோடு உத்திரபிரதேசம், ஓடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்காளங்களில் தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கத்தினை இன்னும் ஊக்கப்படுத்தும்.
இது விரிவாக்கம் செய்யும் நல்ல விஷயம் என்றாலும், அதன் பங்கு விலையில் எதிரொலிக்கவில்லை எனலாம். ஏனெனில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது முடிவில் 0.77 சதவீதம் குறைந்து, 4,895 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியை போல் எஸ்பிஐ யோனோ சேவையும் முடங்கியது..! #SBI #Yono
உண்மையில் லாக்டவுனுக்கு பிறகு பல்வேறு துறைகளும் வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள நிலையில், உள்கட்டமைப்பு துறையும் வளர்ச்சியினை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக சிமெண்ட்டின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இனி வரும் காலகட்டத்திலும் சிமெண்ட்டின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் விரிவாக்கம் மேலும் கைகொடுக்கலாம்.
இது வரும் காலத்திலும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.