ரூ.7, 000 கோடி டீல்.. காத்திருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி சிமெண்ட் மற்றும் கட்டிடப்பொருட்கள் தயாரிக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் நாட்டின் கட்டுமான வளர்ச்சியைக் கணக்கிட்டு தனது உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தை இரட்டிப்புச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தருணத்தில் தான் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு ஒரு ஜாக்பாட் கிடைத்துள்ளது.

ஆம், நாட்டின் மற்றொரு முன்னணி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஈமாமி சிமெண்ட் நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தை எப்படியாவது மொத்தமாக வாங்க வேண்டும் என அல்ட்ராடெக் சிமெண்ட் முயற்சி செய்து வருகிறது.

 110 பில்லியன் டாலர் இலக்கு.. மத்திய அரசு திட்டமிட்டு வரும் 110 பில்லியன் டாலர் இலக்கு.. மத்திய அரசு திட்டமிட்டு வரும் "புதிய" அறிவிப்பு..!

ஈமாமி சிமெண்ட்

ஈமாமி சிமெண்ட்

இந்நிறுவனத்தை வாங்குவதற்காக அல்ட்ராடெக் நிறுவனம் மட்டும் அல்லாமல் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமும் போட்டி போட்டு வருகிறது. இந்தக் கடுமையான போட்டிக்கு முக்கியமான காரணம் இந்தியாவில் உருவாகி வரும் மிகப்பெரிய உள்கட்டுமான திட்டங்கள் தான். நாடு முழுவதும் கட்டுமான திட்டங்களை அமலாக்கம் செய்யப்படும் போது சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களின் தேவை அதிகமாகும். அதற்கு ஏற்ப உற்பத்தித் திறன் இருந்தால் மட்டுமே இந்த மாபெரும் வர்த்தகத்தை அடைய முடியும்.

7000 கோடி ரூபாய்

7000 கோடி ரூபாய்

இன்றைய நிலவரத்தின் படி ஈமாமி சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தை வாங்குவோர், அந்த நிறுவனத்தை மொத்தமாக வாங்க வேண்டும். அதுவும் மொத்தமும் பணமாகக் கொடுக்க வேண்டும் என்பதே டீலின் அடிப்படை கோரிக்கையாக உள்ளது.

இப்படியிருக்கையில் இந்த டீலின் மொத்த மதிப்பு 6, 500 கோடி ரூபாய் முதல் 7, 000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தோல்வி
 

தோல்வி

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் படி ஈமாமி சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்திற்காக அம்புஜா சிமெண்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஏல தொகை மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது.

இதனால் இந்த டீல் ஆதித்யா பிர்லா குரூப்-க்கு சொந்தமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்குத் தான் கிடைக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 

கிழக்கு இந்தியா

கிழக்கு இந்தியா

ஈமாமி சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கைப்பற்றுவதன் மூலம் தனது வர்த்தகத்தைக் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அல்ட்ராடெக் மற்றும் அம்புஜா ஆகிய நிறுவனங்களின் ஏல விண்ணப்பம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஈமாமி சிமெண்ட் வருடத்திற்கு 8 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கிறது. அல்ட்ராடெக் வருடத்திற்கு 117 மில்லியன் டன் சிமெண்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UltraTech offers 7, 000 cr to buy Emami Group’s cement business

UltraTech Cement Ltd, India’s largest producer of the building material, has emerged as the front-runner to buy the cement business of Emami Group in an all-cash deal worth ₹6, 500-7, 000 crore, according to three people with direct knowledge of the discussions.
Story first published: Tuesday, December 24, 2019, 9:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X