பட்ஜெட்டில் என்ன செய்யலாம்.. வாருங்கள் ஐடியா சொல்லுங்கள்.. மக்களை அழைக்கும் பிரதமர் மோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வரவிருக்கும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் யோசனை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு மக்கள் உங்களது கருத்துகளையும், யோசனைகளையும் https://www.mygov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்றும் @mygovindia ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆயுத விற்பனையில் இறங்கும் அதானி.. புதிய துவக்கம்..!

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
 

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

ஆக பொதுமக்கள் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தாங்கள் பட்ஜெட் குறித்தான தங்களது கருத்துகளை அந்த தளத்தில் பதிவிடலாம். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவிகிதமாகக் குறையும் என மத்திய புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பகிருங்கள்

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையும், போர்ப் பதற்றமும் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 2020 - 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கருத்துகளை தெரிவிப்பதற்கான இணையதளத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பட்ஜெட் குறித்தான ஆலோசனை

பட்ஜெட் குறித்தான ஆலோசனை

இந்த பட்ஜெட் குறித்தான ஆலோசனைக்காக முன்னதாக பல முன்னணி தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நிலையும், அதிலும் தொழில் துறையில் மந்த நிலையை போக்கவும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அடுத்து வரவிருக்கும் தசாப்தம் தொழில்துறையினருக்கானதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை
 

பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை

வரவிருக்கும் பட்ஜெட் குறித்தான ஆலோசனையில் முன்னதாக தொழிலதிபர் என பலருடன் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று முக்கிய பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையால், நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடித்தட்டு மக்களுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Union Budget 2020 : PM Narendra modi invites people’s ideas and suggestions for upcoming Budget

Prime Minister Narendra modi invites people’s ideas and suggestions for upcoming Budget, and ahead of union budget 2020, PM meet to top economists today.
Story first published: Thursday, January 9, 2020, 10:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X