மத்திய பட்ஜெட் 2023: 50 வருடம் வட்டியில்லா கடன்.. மாபெரும் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022-23 ஆம் ஆண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ், மூலதன முதலீட்டுத் திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடனாக மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை தற்போது அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட் 2023 அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்காக மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்

வேகமாக வளர்ச்சி

வேகமாக வளர்ச்சி

இந்தியாவின் வேகமான வளர்ச்சி பாதைக்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் இதை மேம்படுத்த மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் வகையில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு வட்டியில்லா கடன் அளித்து வந்தது.

ஒரு வருட நீட்டிப்பு

ஒரு வருட நீட்டிப்பு

இந்த முக்கியமான திட்டத்தை மத்திய அரசு அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிப்புச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தத் திட்டம் மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும்.

போக்குவரத்து உள்கட்டமைப்பு

போக்குவரத்து உள்கட்டமைப்பு

இதே வேளையில் மத்திய அரசு போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளது. 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர் ஏரோட்ரோம்கள் மற்றும் மேம்பட்ட தரையிறங்கும் மண்டலங்கள் புத்துயிர் பெற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கியத் துறை

முக்கியத் துறை

இதேபோல் ஸ்டீல், துறைமுகங்கள், உரம், நிலக்கரி, உணவு தானியம் ஆகிய துறைகளுக்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ.75,000 கோடி அரசு முதலீட்டிலும், தனியார் மூலங்களிலிருந்து ரூ.15,000 கோடி உடன் செயல்படுத்த கண்டறியப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிற முக்கிய நிதி ஒதுக்கீடு

பிற முக்கிய நிதி ஒதுக்கீடு

740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யவும், ரயில்வே துறைக்கு ரூ2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சாலை கட்டமைப்புகளுக்கு ரூ70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

union budget 2023: 50-year interest free loan to State governments extended for one more year

union budget 2023: 50-year interest free loan to State governments extended for one more year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X