90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. zerodha வேற லெவல் !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய புரோக்கிங் நிறுவனமான ஜெரோதாவின் 1100 ஊழியர்களில், 90% ஊழியர்கள் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதிக்கப்படுவார்கள் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

ஜெரோதாவின் இந்த அறிவிப்பினால் கிட்டத்தட்ட 950 பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தால் வாடும் இந்திய மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?! பணவீக்கத்தால் வாடும் இந்திய மாநிலங்கள்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

கொரோனாவின் வருகைக்கு பின்

கொரோனாவின் வருகைக்கு பின்

இது குறித்து நிதின் காமத் மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில், முக்கிய டீம்கள் ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஊழியர்கள் பணிபுரியும் கலாச்சாரம் என்பது பெரியளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிய கஷ்டப்பட்ட ஊழியர்கள் கூட, தற்போது நிரந்தமாக வீட்டில் இருந்தே பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

செயற்கை கோள் அலுவலகங்கள்

செயற்கை கோள் அலுவலகங்கள்

ஜெரோதா ஊழியர்களும் பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே தங்களது செயல்பாடுகளை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரியும் அதன் ஊழியர்களுக்காக, கர்நாடகாவின் சிறு நகரங்களில் செயற்கைகோள் அலுவலகங்களை அமைக்க தொடங்கியுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்தார்.

சுதந்திரமாக பணி

சுதந்திரமாக பணி

எங்கள் ஊழியர்கள் 85 - 90% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிகிறோம். நாங்கள் தொடர்ந்து பணி புரிவோம். கர்நாடகாவின் பெலாகவியில் அலுவலகத்தை அமைத்துள்ளோம். பெலகாவிற்கு அற்புதமான திறமை உண்டு. அங்கு பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் பெண் ஊழியர்கள் உள்பட பலரும் சுதந்திரமாக பணிபுரிகின்றனர்.

இந்தியாவின் சிறந்த யூனிகார்ன்

இந்தியாவின் சிறந்த யூனிகார்ன்

ஜெரோதா இந்தியாவின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று. வெளி நிதி திரட்டாத இந்திய யூனிகார்ன் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது கடந்த ஆகஸ்ட் 2010ல் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் முன்னணி புரோக்கிங் நிறுவனமாகும். இங்கு 9 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த சில்லறை வர்த்தக அளவுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

எது எப்படியோ மொத்தத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிவது என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Up to 90% of employees may allow work from home in permanently : zerodha CEO

Up to 90% of Zerota's 1,100 employees will be allowed to work permanently from home, said Nitin Kamath, the company's CEO and co-founder.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X