யூபிஐ வழியாக பறக்கும் பணப் பரிமாற்றம்! ஜூன் 28 வரை 2.31 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2016-ம் ஆண்டு தான், இந்தியாவில் யூ பி ஐ (UPI - Unified Payment Interface) வசதியைக் கொண்டு வந்தார்கள். இந்த யூ பி ஐ பணப் பரிமாற்றம் வழியாக, செய்யும் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை (Number of Transaction) ஒவ்வொரு மாதம் நல்ல வளர்ச்சி கண்டு வந்தது.

 
யூபிஐ வழியாக பறக்கும் பணப் பரிமாற்றம்! ஜூன் 28 வரை 2.31 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றமாம்!

அதே போல, யூ பி ஐ வழியாக பரிமாற்றம் செய்யப்படும் பணத்தின் அளவும் (Rupee Amount or Value of the Transaction) அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 2020-ல் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை மற்றும் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தின் அளவு இரண்டுமே சரிந்தது.

எவ்வளவு சரிந்தது. கடந்த பிப்ரவரி 2020-ல் 1,325 மில்லியன் எண்ணிக்கையில் பணப் பரிமாற்றங்கள் நடந்தது. 2.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணp பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது எகமானிக் டைம்ஸ் தரவுகள்.

ஆனால் ஏப்ரல் 2020-ல் (கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு, லாக் டவுன் அறிவித்து இருந்த காலம்) யூ பி ஐ பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை 999 மில்லியனாகவும், பரிமாற்றம் செய்யப்படும் பணத்தின் அளவு 1.51 லட்சம் கோடி ரூபாயாகவும் சரிந்தது.

இந்த சரிவு, அடுத்தடுத்த மாதங்களில் மெல்ல சரிகட்டப்பட்டு இருக்கிறது. இந்த 28 ஜூன் 2020 வரை மட்டும், யூ பி ஐ வழியாக 1,422 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடந்து இருக்கிறதாம். 2.31 லட்சம் கொடி ரூபாய் பணம் பரிமாற்றாமாகி இருப்பதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் தரவுகள்.

ஆக ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சி கண்ட யூ பி ஐ பணப் பரிமாற்றங்கள், இப்போது மீண்டும் ஜூனில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

தற்போது இந்தியாவின் யூ பி ஐ பேமெண்ட் கம்பெனிகளில் டாப்பாக இருக்கும் கூகுள் பே, கொரோனாவுக்குப் பின், பணப் பரிமாற்றம் எண்ணிக்கை, தங்களுக்கு அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.

அதே போல வால்மார்ட் நிறுவனத்தின் பேமெண்ட் கம்பெனியான போன் பேவும், தங்களின் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UPI payments in june 2020 touched 1.4 billion transaction Rs 2.31 lakh crore

UPI payments in june 2020 touched 1.4 billion transaction Rs 2.31 lakh crore. The digital transaction numbers just bounce back in few months.
Story first published: Tuesday, June 30, 2020, 19:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X