இந்தியாவின் கடைசி டீக்கடை வரை சென்ற யூபிஐ.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர் டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் யுபிஐ என்ற பண பரிமாற்றம் மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் அந்த பரிமாற்ற செயலி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

நகரங்களில் மட்டுமன்றி கிராமப்புறத்தில் இந்த செயலிக்கு வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்தியாவின் கடைசி டீக்கடை என்று அழைக்கப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு டீ கடைகளிலும் இந்த யுபிஐ பயன்படுத்தப்படுவதாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ரூ.6 லட்சம் கோடி.. நினைத்திடாத உயரத்தை தொட்ட யூபிஐ..! ரூ.6 லட்சம் கோடி.. நினைத்திடாத உயரத்தை தொட்ட யூபிஐ..!

டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை

யுபிஐ என்று கூறப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் பண பரிவர்த்தனையை மிகவும் எளிதாகி விட்டது என்று கூறினால் அது மிகையாகாது. பெரிய மற்றும் சிறிய என அனைத்து கடைகளிலும் பணம் செலுத்துவதற்கான யுபிஐ QR குறியீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

அந்த வகையில் இந்தியாவின் கடைசி டீக்கடை என்று கூறப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மானா என்ற கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் யுபிஐ QR குறியீடுகள் வசதி செய்யப்பட்டு இருப்பது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடைசி டீக்கடை

இந்தியாவின் கடைசி டீக்கடை

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மானா என்ற கிராமத்தில் 10 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டீக்கடை பெயர் இந்தியாவின் கடைசி டீக்கடை என அழைக்கப்படுகிறது. இந்த டீக்கடை இந்திய சீன எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமம் தான் சீன எல்லைக்கு முந்திய இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது. மேலும் இந்த கிராமம் மகாபாரத இதிகாசத்தில் தொடர்புடைய பல்வேறு இடங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ QR குறியீடுகள்

யுபிஐ QR குறியீடுகள்

இந்த டீக்கடையில் யுபிஐ QR குறியீடுகள் ஸ்கேனர் பயன்படுத்தும் படம் ஆனந்த் மஹிந்திர அவர்களின் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மதிப்பு உடையது என்றும் இந்தியாவின் டிஜிட்டல் நோக்கத்தையும், அதன் அளவையும் முழுமையாக அடைந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இதிலிருந்து பெரிய நகரங்களில் மட்டுமன்றி சிறிய கிராமத்தில் கூட யுபிஐ பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது. இது குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான விழிப்புணர்வு மிக வேகமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 டிஜிட்டல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் தொழில்நுட்பம்


ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டை பார்த்த பல பயனாளிகள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இந்தியாவின் கடைசி டீக்கடை என்று சொல்வதை விட இந்தியாவின் முதல் டீக்கடை என்று சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது கடைசி மைல்களையும் அடையும் விஷயம் மிக அற்புதமானது என்றும் இன்னொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UPI system for its presence in Indias Last Tea Shop, Anand Mahindra tweet

We have seen that Narendra Modi is taking various initiatives to make India digital after assuming office as Prime Minister. In that way, when the central government introduced UPI, the money transfer app gained great popularity across the country.
Story first published: Monday, November 7, 2022, 6:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X