இனி கிராமங்கள் தான் பெஸ்ட்.. நகர்புறங்களில் 18% அதிகரித்த வேலையின்மை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கடுமையான லாக்டவுனால், பொருளாதார நடவடிக்கைகள் சரிந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையின்மை விகிதம், குறிப்பாக நகர்புறங்களில் 18% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்தில் மிக அதிகம் என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மே 30வுடன் முடிவடைந்த காலகட்டத்தில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் என்பது 17.88% அதிகரித்துள்ளது. இது கடந்த 15 நாட்களுக்கு முன்னர் 3 புள்ளிகள் குறைந்து 14.71% ஆக இருந்ததாக CMIE தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதே மே 2வுடன் முடிவடைந்த வாரத்தில் நகர்புறத்தில் வேலையின்மை விகிதம் 10.08% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்பு விகிதமும் சரிவு

பங்கேற்பு விகிதமும் சரிவு

அதேபோல நகர்புற இந்தியாவில் தொழிலாளர்களில் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலை வாய்ப்ப்ய் விகிதமும் குறைந்துள்ளது. மே 30-வுடன் முடிவடைந்த வாரத்தில் LFPR விகிதம் 35.69% குறைந்துள்ளது. இதே மே 16வுடன் முடிவடைந்த வாரத்தில் 37% ஆக இருந்தது என்று CMIE தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கிராமம் தான் பெஸ்ட்

கிராமம் தான் பெஸ்ட்

இதே காலகட்டத்தில் கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதமானது கணிசமான அளவு குறைந்துள்ளது. இது மே 30வுடன் முடிவடைந்த வாரத்தில் கிட்டதட்ட 5% குறைந்துள்ளது. இதே 15 நாட்களுக்கு முன்பு 9.58% ஆக குறைந்தது. இதே போல தேசிய வேலையின்மை விகிதமும் இதே காலகட்டத்தில் 2% மேல் குறைந்துள்ளது. சமீபத்திய தரவின் படி இந்த விகிதமானது 9.58% ஆக இருந்தது கவனிக்கதக்கது.

லாக்டவுனுடன் நேரடி தொடர்பு

லாக்டவுனுடன் நேரடி தொடர்பு


நிபுணர்கள் நகர்புறங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும், லாக்டவுனுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளன. இதனால் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இதே கிராமப்புறங்களில் விவசாயம், தோட்டக்கலை மற்றும் சிறு தொழில்கள், குடும்பத் தொழில்களில் மக்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதமானது குறைவாக காணப்படுகிறது என்றும் சுட்டி காட்டியுள்ளனர்.

முக்கிய காரணங்கள்

முக்கிய காரணங்கள்

மேலும் தற்போதைய நெருக்கடியான காலக்கட்டங்களில் முதலாளிகள் புதியதாக பணியமர்த்தலை செய்ய தயங்குகின்றனர். அதிக தொழிலாளர்கள் இருந்தால் தொற்று பரவும் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. வேலை வாய்ப்புகள் குறைவு உள்ளிட்ட முக்கிய காரணிகளால் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிலைமை 3 - 6 மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு குறைந்துள்ள துறைகள்

வேலை வாய்ப்பு குறைந்துள்ள துறைகள்

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் தவிர, மற்ற துறைகளில் வேலை வாய்ப்பு என்பது குறைவாகத் தான் உள்ளது. குறிப்பாக வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள், சில்லறை சந்தைகள், ஆட்டோமொபைல் துறை, முரைசாரா துறை, நகர்புற சந்தைகள், ஹாஸ்பிட்டாலிட்டி, விரும்தோம்பல் துறை, சுற்றுலா துறைகளில் வேலை வாய்ப்பு என்பது மிக குறைந்துள்ளது.

நுகர்வு சரிவு

நுகர்வு சரிவு

வேலை வாய்ப்பு குறைவால் நுகர்வும் குறைந்து விட்டது. தேவையும் சரிந்து விட்டது. இதனால் வணிகமும் சரிந்துள்ளது. ரோலர் கோஸ்டர் போல ஒரு நெருக்கடியான நிலையை சமூகம் எதிர்கொண்டுள்ளது. ஆக வேலைவாய்ப்பின்மை என்பது நுகர்வில் மோசமான சரிவினை ஏற்படுத்துகின்றது என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கவலையளிக்கும் தேவை சரிவு

கவலையளிக்கும் தேவை சரிவு

Ficci சமீபத்திய தனது அறிக்கையில், வணிக நம்பிக்கையானது மக்களிடத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற 70% பேர், பலவீனமான தேவையானது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுவதாக தெரவித்துள்ளனர். இது முந்தைய காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 56% பேர் கவலையளிப்பதாகவும் கூறியிருந்தனர்.

குறைந்து வரும் தேவை

குறைந்து வரும் தேவை


டெல்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அருப் மித்ரா, ஒரு அறிக்கையில், தேவை குறைந்து வருவது, வருமானம் குறைந்து வருவதை காட்டுகின்றது. வர்த்தக சரிவினை காட்டுகின்றது. ஒட்டுமொத்தமாக மக்களின் பொருளாதாரம் சரிந்து வருவதை சுட்டிக் காட்டுகின்றது. தற்போது மக்கள் பலர் வேலையிழந்துள்ளனர். பலர் குறைவாக சம்பாதிக்கின்றனர்.

முன்னேற்றம் எப்போது?

முன்னேற்றம் எப்போது?

தேவை மீண்டு வர சிறிது காலம் ஆகும். பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். தற்போது இருக்கும் நெருக்கடியான நிலையை, நாம் இணைந்து எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்பதை பொறுத்து இது முன்னேற்றம் இருக்கும் என்றும் மித்ரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Urban unemployment increases to 18%, at this same time rural joblessness falls: check details here

Unemployment latest updates.. Urban unemployment increases to 18%, at this same time rural joblessness falls: check details here
Story first published: Tuesday, June 1, 2021, 20:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X