மீண்டும் உள்ளே வரும் உர்ஜித் படேல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த டிசம்பர் 2018-ல், சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகச் சொல்லி வெளியேறினார் உஜித் படேல். அவர் வெளியேறும் போது அவருக்கும் மத்திய அரசுக்கும் அத்தனை நல்ல உறவு இல்லை.

 

மீண்டும் உள்ளே வரும் உர்ஜித் படேல்!

ஆனால் இப்போது மீண்டும் டெல்லியில் இருக்கும் National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்புக்குத் தலைவராக, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

உர்ஜித் படேலின் பதவி காலம் வரும் 22 ஜூன் 2020 முதல் தொடங்குகிறதாம். உர்ஜித் படேலை வரவேற்று National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்பு ஒரு ஸ்டேட்மெண்ட்டையும் வெளியிட்டு இருக்கிறது.

NIPFP அமைப்பின் தற்போதைய தலைவர் விஜய் கேல்கர் தலைமையில் அடுத்து யாரை தலைவராகக் கொண்டு வரலாம் என விவாதித்த போது, உர்ஜித் படேலின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாம்.

இந்த NIPFP அமைப்பின் தலைவர் பதவி, ஒரு ஆலோசகர் பதவி போலத் தான். இந்த அமைப்பின் தலைவர், இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அதிகம் தலையிடமாட்டாராம். தலைவர் பதவிக்கு வருபவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆண்டுக்கு 3 - 4 முறை கூட்டங்களை நடத்துவார்கள்.

இந்த கூட்டங்களில் நிதி அமைச்சகத்தில் இருந்து 3 பேர், நிதி ஆயோக் அமைப்பில் இருந்து ஒருவர், மத்திய ரிசர்வ் பேங்கில் இருந்து ஒருவர், எந்த மாநிலத்தில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறதோ அந்த மாநிலத்தின் சார்பாக மூன்று பேர் கலந்து கொள்வார்களாம்.

அவர்கள் போக முக்கியமான பொருளாதார நிபுணர்கள், ஆராய்ச்சி மையங்கள் சார்பாக மூன்று பேர், நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அழைப்புவிடுப்பவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களாம்.

இந்த National Institute of Public Finance and Policy (NIPFP) அமைப்பு பெரிய அளவில் அரசின் நிதியில் தான் இயங்குகிறதாம். பொதுவாக இந்த அமைப்பின் தலைவர் தான், தனக்குப் பின் யார் தன் பதவிக்கு வர வேண்டும் என தீர்மானிப்பாராம். அதை அமைப்பின் குழுவில் இருப்பவர்கள் பெரிய அளவில் மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Urjit patel appointed as chairman of NIPFP

Former RBI governor Urjit patel appointed as chairman of NIPFP.
Story first published: Saturday, June 20, 2020, 15:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X