எகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமெங்கும் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், சர்வதேச அளவில் விமான போக்குவரத்துகள் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் தற்போது தான் சில இடங்களுக்கு அனுமதி பெற்று செயல்பட ஆரம்பித்துள்ளன.

 

இதற்கிடையில் அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸின் டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் விமான போக்குவரத்திற்காக, அடுத்த 10 நாட்களுக்கான டிக்கெட்கள் சில மணி நேரங்களுக்குள் விற்று விட்டனவாம்.

இந்த விற்பனையானது இந்தியாவிலிருந்து வெளியே செல்லும் ஒரு அதிகமான தேவையை குறிக்கிறது.

விமானங்கள் இயக்கம்

விமானங்கள் இயக்கம்

டெல்லி மற்றும் நேவார்க் இடையே ஜூலை 10, 12 மற்றும் 15 தேதிகளில் யுனைடெட் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிவில் அமைச்சகத்திடம் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. மேலும் இது தற்போது ஏர் இந்தியா மீதான கவனத்தினையும் ஈர்த்துள்ளது. அதோடு வந்தே பாரத் மிஷன் விமானங்களையும் இது கேட்டுள்ளது. இதற்காக கட்டணங்களையும் அரசாங்கம நிர்ணயித்துள்ளது.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

இது டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்வதற்காக 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தாலும், மற்ற விமான நிறுவனங்கள் ஏற்பாடும் செய்த விமான கட்டணங்களை விட குறைவு தான் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

யுனைடெட் இந்தியா கட்டணம்
 

யுனைடெட் இந்தியா கட்டணம்

எவ்வாறாயினும் யுனைடெட் இந்தியா வசூலித்த கட்டணமும் ஏர் இந்தியா கட்டத்தில் பாதிக்கும் மேலானது என்றும் கூறப்படுகிறது. ஜூலை 12ம் தேதிகளில் 57,498 ரூபாய் முதலும், இதே ஜூலை 10 முதல் ஜூலை 15 தேதிகளில் 60,648 ரூபாயாகவும் உள்ளது. இது கட்டண விகிதங்களை சரி பார்க்கும் நேரத்தில் இருக்கைகள் விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. உள்ளே வரும் விமானங்கள் காலியாக இருந்தாலும் கூட, கட்டணங்கள் குறைவாகவே உள்ளது என்று இத்துறையினை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக மணிகன்ட் ரோல் செய்திகள் கூறுகின்றன.

கட்டணங்களை குறைக்க முடிவு

கட்டணங்களை குறைக்க முடிவு

டெல்லியில் இருந்து யுனைடெட் விமானங்கள் பற்றிய செய்தி வெளி வருவதற்கு சற்று முன்பு, ஏர் இந்தியா வந்தே பாரத் மிஷன் விமானங்களின் கட்டணங்களை 25 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இடி செய்தியில் வெளியான அறிக்கை ஒன்றில் நியூயார்க் - டெல்லி வரையிலான விமானத்தில் ஒரு பொருளாதார இருக்கை 75,461 ரூபாயாகவும், இதே டொராண்டோ - டெல்லி பொருளாதார டிக்கெட் 75,321 ரூபாயாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குறைந்து விட்டன

குறைந்து விட்டன

ஏர் இந்தியாவின் வலைதளத்தினை பார்க்கும் போது உண்மையில் கட்டணங்கள் குறைந்து விட்டன. ஆனால் இது யுனைடெட் நிறுவனத்தினை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஜூலை 9-க்கான ஏர் இந்தியாவின் நியூயார்க் -டெல்லி விமானத்திற்காக கட்டணம் விலை 1,120 டாலர், அதாவது 83,493 ரூபாயாகும். மேலும் செப்டம்பர் வரையில் விமான டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இதே போல டொராண்டோ டெல்லி விமானத்தின் கட்டண விலையானது 84,901 ரூபாயாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவின் லண்டன், நியூயார்க், டொராண்டோ, நியூயார்க் செல்லும் விமானங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. அனைத்து விமானங்களுக்கான டிக்கெட்களும் விற்று விட்டதாகவும் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US flights from delhi put spotlights on Indian airlines ticket price

Fare dilemma.. US flights from delhi put spotlights on Indian airlines ticket price
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X