அமெரிக்கா மீண்டும் அதிரடி.. DJI உட்பட 8 சீன நிறுவனங்களை தடை செய்த பைடன் அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீதும், சீன நிறுவனங்கள் மீதும் அதிகப்படியான தடைகளை விதித்து வந்த நிலையில் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் பெரிய அளவில் இருந்தது.

இதன் பின்பு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததில் இருந்து அமெரிக்கா - சீனா இடையிலான பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்தது மட்டும் சியோமி போன்ற பல நிறுவனங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் சந்தித்துப் பேசிய போது இரு நாடுகள் உடனான நட்புறவும் இனி மேம்படும் எனப் பேசப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா 8 சீன நிறுவனங்களை அமெரிக்காவில் தடை செய்துள்ளது.

 பைடன் அரசு

பைடன் அரசு

அமெரிக்காவின் பைடன் அரசு சீனாவில் இருக்கும் உய்குர் முஸ்லீம் மக்களைக் கண்காணிப்புச் செய்ய உதவியதற்காகச் சீனாவின் DJI என்னும் முன்னணி ட்ரோன் நிறுவனத்தை அமெரிக்காவில் முதலீடு செய்யத் தடை செய்துள்ளது. DJI நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 8 நிறுவனத்தைச் சீன ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் என்று காரணம் காட்டி அமெரிக்க அரசு தடை செய்துள்ளது.

 அமெரிக்க முதலீட்டாளர்கள்

அமெரிக்க முதலீட்டாளர்கள்

இந்தத் தடை மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் தற்போது தடை செய்யப்பட்டு உள்ள 8 சீன நிறுவனங்கள் உடன் சேர்த்து மொத்தம் 60 சீன நிறுவனங்களில் முதலீடு செய்யவும், பங்குகளைப் பெறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய தடைக்கு மிக முக்கியக் காரணம் சீன அரசு சீனாவில் இருக்கும் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லீம் மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தான்.

 8 சீன நிறுவனங்கள்

8 சீன நிறுவனங்கள்

DJI நிறுவனத்தைத் தாண்டி சென்ஸ்டைம், Megvii, சூப்பர் கம்பியூட்டர் உற்பத்தியாளரான Dawning information Balcklist, கிளவுட்வாக் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Xiamen Meiya Pico, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Yitu டெக்னாலஜிஸ், கிளவுட் கம்பியூட்டிங் நிறுவனமான லியான் டெக்னாலஜி, நெட்போசா ஆகிய 8 நிறுவனங்களை CMIC பிளாலிஸ்ட்-ல் சேர்த்துள்ளது.

 DJI மற்றும் Megvii

DJI மற்றும் Megvii

தற்போது தடை செய்யப்பட்ட 8 நிறுவனத்தில் DJI மற்றும் Megvii ஆகிய நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் இல்லை, மற்ற அனைத்து நிறுவனங்களும் ஷாங்காய் மற்றும் ஷென்சன் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

 Entity List கட்டுப்பாடுகள்

Entity List கட்டுப்பாடுகள்

ஏற்கனவே இந்த 8 நிறுவனங்களும் அமெரிக்க அரசின் 'Entity List' பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்ப ஏற்றுமதியோ அல்லது அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்களைச் சீன நிறுவனங்களுக்கு, அரசு அனுமதி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியாது எனக் கட்டுப்பாடு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Govt Blacklist DJI and 7 more chinese companies involvement in uyghur Muslim

US Govt Blacklist DJI and 7 more chinese companies involvement in uyghur Muslim DJI உட்பட 8 சீன நிறுவனங்களைத் தடை செய்த அமெரிக்க அரசு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X