ஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் ஜானதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவிக்கு வந்தத்தில் இருந்தே, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை. அமெரிக்க பொருட்களுக்கு தான் முக்கியத்துவம் என்றும் கூறி வருகிறார்.

 

இதற்கிடையில் தான் கொரோனாவும் பரவ ஆரம்பித்தது. கொரோனாவின் காரணமாக உலகம் முழுக்க பாதிப்பு இருந்தாலும், அது அமெரிக்காவினை பெரியளவில் பதம் பார்த்து விட்டது எனலாம்.

இந்த நிலையில் பல லட்சம் பேர் வரலாறு காணாதஅளவு வேலையினை இழந்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்க, ஹெச் 1பி விசா உள்ளிட்ட பலவற்றை தற்காலிகமாக இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்துள்ளது அமெரிக்கா.

ஐடி துறைக்கு பாதிப்பு

ஐடி துறைக்கு பாதிப்பு

இது யாருக்கு பாதிப்போ இல்லையோ, நிச்சயம் ஐடி துறையினருக்கு பெருத்த அடி தான். ஏனெனில் அமெரிக்காவில் உள்ள அதிகளவிலான ஹெச் 1பி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஐடி துறையினரே. அவர்களில் அதிகளவு இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையே நிறுவன வாரியாக பார்த்தால், விப்ரோ மற்றும் டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

காக்ணிசன்ட் நிறுவனத்திற்கு பாதிப்பு

காக்ணிசன்ட் நிறுவனத்திற்கு பாதிப்பு

இதற்கிடையில் காக்ணிசன்ட் நிறுவனத்திற்கு பாதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஏன் குறிப்பாக காக்ணிசன்ட் நிறுவனத்தில் அதிக ஹெச் 1பி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரி அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கையினால் இந்தியர்களுக்கு ஏன் பாதிப்பு? என்ன காரணம்? ஏனெனில் இந்தியர்களை பொறுத்த வரையில் அமெரிக்கர்களை ஒப்பிடும்போது சம்பளம் குறைவு தான்.

அதிக லாபம்
 

அதிக லாபம்

அதிலும் அமெரிக்கா ஊழியர்களுடன் ஒப்பிடும்போதும் சம்பளம் குறைவு தான். இதனால் ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசாவினால் பெருத்த லாபம் காண்கின்றன. ஆக தற்போது அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையால் முதலில் பாதிக்கப்படுவது நிறுவனங்கள் தான். ஏனெனில் தங்களது திட்டங்களை விரைந்து முடிக்க அமெரிக்கர்களை பணியில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இனி லாபம் குறையும்

இனி லாபம் குறையும்

இதனால் நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறையும். குறிப்பாக காக்ணிசன்ட் நிறுவனம் அதிகம் பாதிக்கபடும் என்பதற்கு காரணம் அமெரிக்காவில் அதிகளவில் ஹெச் 1பி ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனம் இதுவேயாகும். 24,382 பேர் ஹெச் 1பி விசா மூலம் உள்ளனர். ஆனால் இதே ஹெச்சிஎல்லில் 7,199 ஹெச் 1பி விசா ஊழியர்கள் உள்ளனர்.

எந்த நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள்

எந்த நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள்

இதே டிசிஎஸ் நிறுவனத்தில் 21,950 ஊழியர்கள் அமெரிக்காவில் ஹெச் 1பி விசா மூலம் உள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனம் கூட 13,042 ஊழியர்களைத் தான் கொண்டுள்ளது. இதில் விப்ரோ நிறுவனம் 10,000 ஊழியர்களையும், டெக் மகேந்திரா நிறுவனம் 7,000 ஊழியர்களையும் கொண்டுள்ளது. ஆக மொத்தத்தில் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது காக்ணிசன்ட் நிறுவனம் தான்.

டிசிஎஸ்க்கு பாதிப்பு இல்லை

டிசிஎஸ்க்கு பாதிப்பு இல்லை

ஹெச் 1 பி விசா மூலம் அதிக ஊழியர்களை கொண்டுள்ளதில் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனம் டிசிஎஸ் தான். எனினும் இதற்கு பாதிப்பு அதிகம் இல்லை என்று கூறப்ப்படுகிறது. ஏனெனில் டிசிஎஸ்ஸில் 58,874 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 40% மட்டுமே இந்தியர்கள். மீதம் அமெரிக்கர்கள் தான். ஆக இந்த விசா தடையானது அவர்களை பெரிதும் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US H1B Visa Ban: Impact on Cognizant Will be high

H 1b Visa ban impact on cognizant will be high, HCL and TCS will be least impact, Because Cognizant has the highest number of H1B employees in the US.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X