இந்தியா ஒரு ஹாட் மார்கெட்.. அமெரிக்கா முதலீட்டு நிபுணர் சொன்ன செம விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியா ஒரு ஹாட் மார்கெட் என்று அமெரிக்காவின் முதலீட்டு குருவான ஜிம் ரோஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டாளரும், பொருளாதார நிபுணருமான இவர், பங்கு சந்தை, தங்கம் வெள்ளி என பலவற்றிலும் முதலீடு செய்து வருபவர், முதலீட்டு ஆலோசகரும் கூட.

இப்படி பல தகுதிகளை கொண்ட, ஒரு மாபெரும் நிபுணர், முதலீட்டாளர்களுக்கு இந்தியா நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு ஹாட் மார்கெட்
 

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு ஹாட் மார்கெட்

நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினால் பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், இது இன்னும் எந்தளவுக்கு சரியுமோ என்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவரோ இந்தியா தான் வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியா ஒரு ஹாட் மார்கெட் என்று கூறியுள்ளாரே எப்படி, வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம் வாருங்கள்.

நெருக்கடியான நேரத்திலும் ஏற்றம்

நெருக்கடியான நேரத்திலும் ஏற்றம்

இந்தியாவின் புளூசிப் குறியீடுகள் கடந்த மார்ச் மாத குறைந்த விகிதத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளன. அதே போல மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 80 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன. இது மத்திய வங்கியின் ஆதரவு மற்றும் கொரோனா தடுப்பூசி விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையினால் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் என்ன நடக்கிறது பாருங்கள்

இந்தியாவில் என்ன நடக்கிறது பாருங்கள்

கிட்டதட்ட எல்லா இடங்களிலும் நிறைய பணம் அச்சிடப்பட்டு செலவிடப்படுகிறது. இந்த நேரத்தில் வளர்ந்து வரும் சந்தைகள் மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளன. எனவே அவர்கள் மீண்டு வர என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதிலும் இந்தியாவில் என்ன நடக்கிறது பாருங்கள். எல்லோரும் இந்தியாவில் இப்போது முதலீடு செய்கிறார்கள். இது ஹாட் மார்கெட் என்றும் ரோஜெர்ஸ் கூறியுள்ளார்.

நான் நிச்சயம் முதலீடு செய்வேன்
 

நான் நிச்சயம் முதலீடு செய்வேன்

அதோடு இந்தியாவில் முதலீடு செய்யும் எவரும் மிகவும் புத்திசாலி. நான் வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவிலும் நிச்சயமான முதலீடு செய்வேன். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தின் மத்தியிலும், விவசாயம் மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. அரசு வெளியிட்ட தரவுகளின் படி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விவசாய ஜிவிஏ கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.7% வளர்ச்சி கண்டுள்ளது. இது ஜிடிபிக்கு எதிர்மாறாக உள்ளது.

விவசாயம் தொடர்பான பங்குகள்

விவசாயம் தொடர்பான பங்குகள்

இந்தியா காரீப் பருவத்தில் நல்ல விதைப்பை கண்டுள்ளது. இதன் காரணமான அக்ரி டெக் மற்றும் உர நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுத்துள்ளன. டிராக்டர் விற்பனை கூட கிராமப்புற தேவையினை சுட்டிக் காட்டுகின்றது. அது சமீபத்திய மாதங்களில் சாதகமான வளர்ச்சியினை கண்டுள்ளது என ரோஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பற்றி

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பற்றி

இதே தங்கம் மற்றும் வெள்ளி விலையினை பற்றி கூறியவர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும். நான் கடந்த ஆண்டு முதல் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ச்சியாக 2019 முதல் முதலீடுகளை செய்து வருகிறேன், இனியும் தொடர்ந்து இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US investment guru Jim rogers says india is a hot market

US investment guru Jim rogers says india is a hot market, he also said gold and silver prices are will soon hit in new record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?