அமெரிக்காவில் இந்தியர்கள் பணிநீக்கமா.. கவலைபடாதீங்க இங்க வாங்க.. Dream 11 சிவப்பு கம்பள வரவேற்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி லாபகரமான யூனிகார்ன்களில் ஒன்று ட்ரீம் 11. இதன் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஹர்ஷ் ஜெயின், அமெரிக்காவில் இருந்து வரும் முன்னணி நிறுவனங்களின் மிகப்பெரிய பணி நீக்கத்தின் மத்தியில், இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் 2022 தொழில்நுட்ப பணி நீக்கங்களில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள், அடுத்த தசாப்தத்தில் இங்கு உயர் தொழில்நுட்ப வளர்ச்சியினை உணர உதவும் வகையில், குறிப்பாக விசா சிக்கலில் உள்ளவர்களை திரும்ப இந்தியா வருமாறு நினைவூட்டுங்கள் என தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து! மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து!

பெரியளவில் பணி நீக்கம்

பெரியளவில் பணி நீக்கம்

அமெரிக்க நிறுவனங்களில் 2022ல் இதுவரையில் 52,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் அமெரிக்க நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கிரன்ச்பேஸ் மதிப்பீடு கணித்துள்ளது. இது அமெரிக்காவில் பொருளாதார சரிவானது மோசமாக இருந்து வரும் நிலையில் உள்ளது.

யார் யார் பணி நீக்கம்

யார் யார் பணி நீக்கம்

விரைவில் அமெரிக்கா ரெசசனில் நுழையலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே ட்விட்டர், ஸ்ட்ரைப், சேல்ஸ்போர்ஸ், லிஃப்ட், ஸ்பாட்டிபை, பெலோடன், நெட்ஃபிக்ஸ், ராபின் ஹுட், இன்ஸ்டாகார்ட், உதாசிட்டி, புக்கிங்.காம், ஜில்லோ, லூம், பியான்ட் மீட் மற்றும் பிற டெக் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் பனி நீக்கம் செய்துள்ளனர்.

 கடுமையான பாதிப்பு

கடுமையான பாதிப்பு

நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொது சந்தைகள் என்பது கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது. இது தனியார் சந்தைகளை மோசமாக்கியது. பணவீக்கம் குறித்தான அச்சம், இதன் காரணமாக அதிகரிக்கும் வட்டி, அரசியல் பதற்றங்கள் என பலவும் பங்கு சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்டார்ட் அப்கள் அழுத்தம்

ஸ்டார்ட் அப்கள் அழுத்தம்

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் ஏற்றம் கண்ட ஸ்டார்ட் அப்கள், மீண்டும் சரிவினைக் காண தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மீண்டும் அழுத்தம் காணத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தற்போது நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் நிதி திரட்டுவது என்பதும் மிக கடினமான சூழலாக இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப் பங்குகளும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் பணி நீக்கம்

இந்தியாவிலும் பணி நீக்கம்

இந்தியாவிலும் கூட பல ஸ்டார்ட் அப்கள், குறிப்பாக எட்டெக் ஸ்டார்ட் அப்கள், மிகப்பெரிய பணி நீக்கத்தினை செய்து வருகின்றன.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ட்ரீம் ஸ்போர்ட் குழுமம், தற்போது 8 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றாகும். இது தொடர்ந்து லாபத்தில் இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று. இது தற்போது அதன் போர்ட்போலியோவில் 150 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இந்த குழுமத்தில் ட்ரீம் 11, ராரியோ, ஃபேன்கோடு, ட்ரீம் பே, ட்ரீம்செட்கோ மற்றும் இன்னும் சில நிறுவனங்களும் அடங்கும்.

கேமிங்கில் முதலிடம்

கேமிங்கில் முதலிடம்

ரியல் மணி கேமிங் ஆப்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை அனுமதித்த பிறகு, கடந்த அக்டோபர் 9 அன்று கூகிள் பிளே ஸ்டோரில் ட்ரீம் 11 தொடங்கப்பட்டது. நவம்பர் 2ம் தேதிக்குள் பிளே ஸ்டோரில் கேமிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

திறன் வாய்ந்தவர்கள் தொடரலாம்

திறன் வாய்ந்தவர்கள் தொடரலாம்

இதற்கிடையில் ஹர்ஷ் ஜெயின் தனது பதிவில், எங்களிடம் 10 போர்ட்போலியோ நிறுவனங்கள் உள்ளன. ஆக நாங்கள் திறமைகளை தேடி வருகின்றோம். குறிப்பாக டிசைன், ப்ராடக்ட் & டெக் உள்ளிட்டவற்றி,ல் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், அது நீங்களாக இருந்தாலும் சரி, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் தயாங்கமல் எங்களை தொடர்பு கொள்ளுங்களும் என பதிவிட்டுள்ளார்.

மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்

மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்

அது மட்டும் அல்லது ஹர்ஷ் தனது மெயில் ஐடியினையும் பதிவிட்டுள்ளார். அது *(indiareturns@dreamsports.group) ஆகும். இதன் மூலம் இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US mass layoff: Dream 11 called Come to India

Indian officials, affected by the 2022 tech layoffs in the US, have posted on their LinkedIn page to remind them to come to India to help realize high-tech growth here in the next decade
Story first published: Tuesday, November 8, 2022, 10:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X