ஹெச்1பி விசா கட்டுப்பாடு நீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் ஹெச்1பி விசா மீது அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்களும் அதிகளவிலான பிரச்சனையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க அரசு ஒரு முக்கியமான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

இதனால் இந்திய ஐடி ஊழியர்களுக்கும், ஐடி நிறுவனங்களும் மகிழ்ச்சியில் உள்ளது.

 இந்த ஐடி பங்கினை வாங்கி போடலாம்... ஷேர்கானின் பலே பரிந்துரை..! இந்த ஐடி பங்கினை வாங்கி போடலாம்... ஷேர்கானின் பலே பரிந்துரை..!

 ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

ஜனவரி மாதம் அமெரிக்க அரசு தனது ஹெச்1பி விசா அளிப்பதில் தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. அமெரிக்க அரசு அறிமுகம் செய்த புதிய திட்டத்தில் ஹெச்1பி விசா தேர்வு செய்யும் பணியில் லாட்டரி முறையை முழுமையாக நீக்கிவிட்டு, பதவி மற்றும் சம்பளம் அடிப்படையில் ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்ற விதியை அறிமுகம் செய்தது.

 இந்தியர்களுக்கு அதிகப் பாதிப்பு

இந்தியர்களுக்கு அதிகப் பாதிப்பு

இந்தப் புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் இருந்து அமெரிக்கச் செல்லும் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும், ஐடி நிறுவனங்களுக்குப் பல மடங்கு அதிக சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை உருவாகும்.

 இந்திய ஐடி துறை

இந்திய ஐடி துறை

இது இந்திய ஐடி துறைக்கு மட்டும் அல்லாமல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வேலை தேடி வரும் அனைவருக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர்ந்து அமெரிக்கச் சேம்பர் ஆப் காமர்ஸ் உட்படப் பல அமைப்புகள் இந்தப் புதிய கட்டுப்பாட்டுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பும் சாதகமாக அமைந்துள்ளதால் அமெரிக்க அரசு இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டிய நிலை உருவானது.

 டிசம்பர் 22ஆம் தேதி

டிசம்பர் 22ஆம் தேதி

இந்நிலையில் அமெரிக்க அரசு ஹெச்1பி விசா தேர்வு முறையில் இருந்த இந்தக் கட்டுப்பாட்டை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அதிகாரப்பூர்வமான அறிக்கையை ஃபெடரல் பதவில் இருந்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

 டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஹெச்1பி விசா தேர்வு செய்வதில் லாட்டரி முறையை முழுமையாக நீக்கிவிட்டு, பதவி மற்றும் சம்பளம் அடிப்படையில் ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US withdraws proposal to change H-1B visa selection criteria based on ranking and wage levels

US withdraws proposal to change H-1B visa selection criteria based on ranking and wage levels ஹெச்1பி விசா கட்டுப்பாடு நீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X