ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் மத்தியில் பிப்ரவரி மாதம் துவங்கிய போர் தொடர்ந்து நாளுக்கு நாள் பீதியை அதிகரித்து வருகிறது. இன்று உக்ரைன் படைகள் கிரிமியா விமானத் தளத்தில் இருந்து ரஷ்ய ராணுவ போர் விமானங்களைத் தாக்கி கடுமையாகச் சேதப்படுத்தியது.

 

இது ரஷ்யாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-ஐ ஆக்‌ஷன் ஹீரோவாகச் சித்தரித்துள்ளது அமெரிக்க நிறுவனம்.

7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!

 வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

பிப்ரவரி முதல் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-ஐ நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் உள்ள தயாரிப்பு வடிவமைப்பு நிறுவனம் ஒரு சூப்பர் ஆக்‌ஷன் ஹீரோவாக வடிவமைத்து உள்ளது. இதற்காக அந்நிறுவனம் முதலீட்டைத் திரட்டவும் முடிவு செய்தது.

FCTRY நிறுவனம்

FCTRY நிறுவனம்

FCTRY என்னும் இந்த அமெரிக்க நிறுவனம் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முழு உருவத்தை ஆக்‌ஷன் ஹீரோ பொம்மைகளை உருவாக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு உற்பத்திக்கு நிதி திரட்டும் பொருட்டுக் கிக்ஸ்டார்ட்டர் கேம்பெயின்-ஐ தொடங்கியது.

 பொம்மை விற்பனை
 

பொம்மை விற்பனை

இந்த பொம்மை விற்பனையில் முக்கியப் பங்கு உக்ரைன் நாட்டு மக்களுக்கு நன்கொடையாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தக் கேம்பெயின் வெள்ளியன்று முடிவடைகிறது.

120,000 டாலர்

120,000 டாலர்

FCTRY நிறுவனம் ஜெலென்ஸ்கி பொம்மையைத் தயாரிக்கக் கிக்ஸ்டார்ட்டர் கேம்பெயின் துவங்கிய மூன்று மணி நேரத்தில் அதன் 30,000 டாலர் நிதி இலக்கை எட்டியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தக் கிக்ஸ்டார்ட்டர் கேம்பெயின் முடிவில் சுமார் 120,000-க்கும் அதிகமாகத் தொகையைத் திரட்டியுள்ளது.

1 டாலர் தொகை

1 டாலர் தொகை

மேலும் FCTRY நிறுவனம் தயாரிக்கும் ஜெலென்ஸ்கி பொம்மையை விற்கப்படும் ஒவ்வொன்றுக்கும் 1 டாலர் தொகை உக்ரைன் நாட்டுக்கு நன்கொடையாகச் செல்கிறது என்பதால், உக்ரைன் நாட்டை ஆதரிக்கும் மக்கள் அதிகளவிலான தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர்.

 வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

முன்னாள் நகைச்சுவை நடிகரும் தற்போதைய உக்ரைன் அதிபருமான 44 வயதான ஜெலென்ஸ்கி, கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவுடைய பிரிவினைவாதிகளுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தார். தற்போது ரஷ்யா-வை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்.

 களிமண் சிலை மாடல்

களிமண் சிலை மாடல்

இந்நிலையில் ஜெலென்ஸ்கி-யின் 6 இன்ச் உயரம் கொண்ட களிமண் சிலை மாதிரியை FCTRY நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பொம்மையை வழக்கம் போல் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய FCTRY நிறுவனம் சீனா நிறுவனங்களை நாட உள்ளது. மார்ச் மாதத்திற்குள் இந்தப் பொம்மைகள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA based FCTRY Make Ukraine's Zelenskiy as action figure; raises over $120k to mass production

USA based FCTRY Make Ukraine's Zelenskiy as action figure; raises over $120k to mass production in China ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X