இனி அமெரிக்காவில் கிரீன்கார்டு வாங்குவது ஈசி.. ஆனா 'இவர்'களுக்கு மட்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வல்லரசு நாடுகளுக்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு வெளிநாட்டில் குடியுரிமை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!

குறிப்பாக அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்க நாடாளுமனத்தில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ள Excellence in Technology, Education, and Science (Competes) Act வாயிலாக அந்நாட்டில் முக்கியமானவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனர், பிஹெச்டி பட்டம் பெற்றவர்

ஸ்டார்ட்அப் நிறுவனர், பிஹெச்டி பட்டம் பெற்றவர்

இந்த புதிய தீர்மானத்தின் மூலம் ஸ்டார்ட்அப் மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் எளிதாக அமெரிக்காவில் குடியுரிமை பெற முடியும். இப்புதிய தீர்மானம் அமெரிக்காவில் சட்டமாக மாறுவதற்கு முன்பு இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட இரு கட்சி மாநாட்டுக் குழுவால் இது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவின் போட்டித்தன்மை
 

அமெரிக்காவின் போட்டித்தன்மை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் முதன்மையாக அமெரிக்காவின் போட்டித்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் இதேவேளையில் முன்மொழியப்பட்ட குடியேற்றச் சீர்திருத்தங்கள் சில பிரிவைச் சார்ந்த இந்தியர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா மற்றும் ஆஸ்திரேலியா

கனடா மற்றும் ஆஸ்திரேலியா

மேலும் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர்களுக்குக் குடியுரிமை வழங்கத் தனிப் பிரிவு வைத்துள்ளது, இதன் மூலம் பல நிறுவனத் தலைவர்களையும் முதலீட்டையும் பெற்றுள்ளது.

 EB5 விசா

EB5 விசா

அமெரிக்காவில் EB5 பிரிவில் வாயிலாக முதலீட்டாளர்கள் விசா பெறும் முறை உள்ளது ஆனால் குடியுரிமை பெற முடியாது. தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ள தீர்மானத்தின் மூலம் கனடா, ஆஸ்திரேலியா போல நேரடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் அமெரிக்காவில் எளிதாக குடியுரிமை பெற முடியும்.

கண்டிஷன்

கண்டிஷன்

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் குடியுரிமை பெற வேண்டும் என்றால் இத்திட்டத்தின் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்யும் 18 மாதங்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டுப் முதலீட்டாளர் விண்ணப்பதாரரின் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10% பங்குகளை கொண்டு இருக்க வேண்டும்.

முதலீடு

முதலீடு

இதனுடன் அமெரிக்கக் குடிமகன் அல்லது அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 250,000 டாலர் அளவிலான முதலீட்டை பெற்று இருக்க வேண்டும் இல்லையெனில் 100,000 டாலர் அளவிற்கு அரசு உதவிகளுக்குப் பெற்று இருக்க வேண்டும் என்ற முக்கியமான கட்டுப்பாடு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA House of Reps passes new Act: startups founders, PhD holders gets greencard easily

USA House of Reps passes new Act: startups founders, PhD holders gets greencard easily இனி அமெரிக்காவில் கிரீன்கார்டு வாங்குவது ஈசி.. ஆனா 'இவர்'களுக்கு மட்டும்..!
Story first published: Tuesday, February 15, 2022, 20:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X