Silicon Valley Bank முக்கிய அறிவிப்பு.. அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரிய அடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் முடங்கியது, இதனால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையும் அதிர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அரசு நேரடியாக தலையிட்டு அனைத்து டெபாசிட் கணக்குகளுக்கு பணத்தை முழுமையாக அளிப்பதாக அறிவித்தது.

இதனால் பெரும் பாதிப்பில் இருந்து சர்வதேச முதலீட்டு சந்தை தப்பித்தது, இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கி அதிகாரப்பூர்வமாக திவாலானதாக அறிவித்து சேப்டர் 11 அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. FDIC கைப்பற்றிய பிறகு சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கி பெயருடன் அனைத்து சொத்துக்களும் மாற்றப்பட்டு உள்ளது.

UAE உடன் ரிசர்வ் வங்கி ஒப்பந்தம்.. இதுமட்டும் நடந்துட்டா வேற லெவல் தான்..! UAE உடன் ரிசர்வ் வங்கி ஒப்பந்தம்.. இதுமட்டும் நடந்துட்டா வேற லெவல் தான்..!

சிலிக்கான் வேலி வங்கி

சிலிக்கான் வேலி வங்கி

சிலிக்கான் வேலி வங்கி-யின் தாய் நிறுவனமான SVB ஃபைனான்சியல் குரூப், அதன் CEO மற்றும் அதன் தலைமை நிதி அதிகாரி மீது, இந்த வாரம் அமெரிக்க அரசு கிளாஸ் ஆக்ஷன் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் எதிர்காலத்தில் வட்டி விகித அதிகரித்தால் அதன் வணிகத்தில் எந்த வகையிலான பாதிப்புகளும், அபாயங்களும் ஏற்படும் என வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

SVB ஃபைனான்சியல் குரூப்

SVB ஃபைனான்சியல் குரூப்

ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சிலிக்கான் வேலி வங்கியை கைப்பற்றிய பிறகு, SVB ஃபைனான்சியல் குரூப் உடனான இணைப்பை மொத்தமாக நீக்கியது அமெரிக்க அரசு. இவ்வங்கியின் புதிய நிர்வாகமான சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கி, FDIC இன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு இயங்குகிறது மற்றும் சேப்டர் 11 அறிக்கையில் இது இல்லை.

 2.2 பில்லியன் டாலர்

2.2 பில்லியன் டாலர்

SVB ஃபைனான்சியல் குரூப் தோராயமாக 2.2 பில்லியன் டாலர் அளவிலான பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளது என தெரிகிறது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி சேவைகளுக்கு தூண் ஆக விளங்குகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

சிலிக்கான் வேலி பேங்க் (SVB) பைனான்சியல் குரூப், அமெரிக்காவில் இருக்கும் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கடன் வழங்கும் நிறுவனமாக உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை செய்த காரணத்தாலும், நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்தாலும் தற்போது திவாலாகி அமெரிக்க அரசின் Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டிற்கு இவ்வங்கி சென்றுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

சிலிக்கான் வேலி பேங்க்-ல் Airbnb, காயின்பேஸ், fitbit, linkedin, pinterest, roblox, slack, square, twitch, uber, dropbox, robinhood, moderna,illimina, bioNtech, Sequoia capital, andreessen Horowitz, deloitte, KPMG, wikmedia foundation, Khan academy போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் பணத்தை வைத்துள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப்

இந்திய ஸ்டார்ட்அப்

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வியாழனன்று, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சொந்தமான 1 பில்லியன் டாலர் டெபாசிட்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிக்கான் வேலி வங்கியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

USA Silicon Valley Bank officially files for bankruptcy; FDIC creates bridge bank

USA Silicon Valley Bank officially files for bankruptcy; FDIC creates bridge bank
Story first published: Friday, March 17, 2023, 19:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X