மக்கள் தொகை அதிகமாயிடுச்சுங்க.. அதனால் தான் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.. யோகி ஆதித்யாநாத்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்னோ: நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வேலையின்மை உருவெடுத்துள்ளது என்றே கூறலாம்.

 

அதிலும் சர்வதேச அளவில் அதிகளவு மக்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. ஒரு புறம் வேலையின்மை, மறுபுறம் பொருளாதாரம் என மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்பிரச்சனையானது ருத்ரதாண்டவம் எடுத்து ஆடி வரும் நிலையில், பல மாநிலங்களில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கைகள் வெளியானது.

மக்கள் தொகை அதிகரிப்பு தான் காரணம்

மக்கள் தொகை அதிகரிப்பு தான் காரணம்

உத்திர பிரதேச அரசின் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய யோகி ஆதித்யா நாத், அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் வேலையின்மையும் அதிகரித்துள்ளதாக பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் மிகப்பெரிய மாநிலம்

நாட்டில் மிகப்பெரிய மாநிலம்

உத்திர பிரதேசத்தில் கடந்த ஜூன் 2018 முதல் வேலையற்றோரின் எண்ணிக்கையில் 60% அதிகரித்து 3.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2011ல் இம்மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 200 மில்லியன் ஆகும். மேலும் தனது மாநிலத்தில் தனது அரசாங்கம் 5.13 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டை வழங்கியதன் பின் இது போன்ற கருத்துகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாநிலம் மிகப்பெரியது. இது இளைஞர்களுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஒரு மாவட்டம் ஒரு பொருள்
 

ஒரு மாவட்டம் ஒரு பொருள்

மேலும் அரசின் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் மூலம் நாங்கள் ஐந்து லய்சம் இளைஞர்களை வங்கிகளுடன் இணைத்துள்ளோம். இவ்வளவு பெரிய அளவில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் முன்னோடியில்லாதது என்றும் ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி 2018ல் தொடங்கப்பட்ட ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் தற்போது நல்ல பலன் அளிக்க தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு அதிகரிக்க ஊக்கம்

வேலைவாய்ப்பு அதிகரிக்க ஊக்கம்

இந்த திட்டத்தின் கீழ் 75 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலிருந்தும், ஒரு பொருட்கள் அடையாளம் காணப்பட்டு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பிற உற்பத்தி பிரிவுகள், கடன்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றன. இதன் மூலம் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் யோகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது எங்கள் இலக்கு

இது எங்கள் இலக்கு

யோகி ஆதித்யாநாத் அடுத்து வரும் 2024 -25ல் எங்கள் பொருளாதார இலக்கு 1 டிரில்லியன் டாலர் எனவும் கூறியுள்ளார். இது 2020- 21ல் 250 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் இந்த இலக்கினை அடைய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் அதிவேகமான நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு தீபாவளியிலிருந்து மக்களுக்கு திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி

விவசாயக் கடன் தள்ளுபடி

தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதும், சில திட்டங்களை கைவிடுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாகவே 2017ல் பொறுப்பேற்ற பின்னர், 36,000 கோடி ரூபாய் பண்ணை கடன் தள்ளுபடிக்கு அரசாங்கத்தால் பணம் வழங்க முடிந்தது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

 

 

தள்ளுபடி செய்ய வேண்டாம் என தடுக்க முயற்சி

தள்ளுபடி செய்ய வேண்டாம் என தடுக்க முயற்சி

மேலும் மற்ற மாநிலங்கள் இந்த விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான எங்கள் நடவடிக்கையைத் தடுக்க முயன்றன. ஆனால் அவர்கள் இப்போது தவிக்கின்றனர். எந்தவொரு திட்டமிடலும் பார்வையும் இல்லாமல் நீங்கள் அதை அரசியல் கருவியாக பயன்படுத்தினால், அது வெற்றி பெறாது என்று கூறியுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uttar Pradesh CM Yogi adithyanath said Unemployment has increased because of rise in population

UP chief minister Yogi adityanath said population increased, which is why unemployment also increased. And he said ODOP scheme creating more than 5 lakh jobs for youths.
Story first published: Friday, February 21, 2020, 15:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X