வேதாந்தாவின் அதிரடி திட்டம்.. 600 பேருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு வகைப்பட்ட இயற்கை வளங்களை சார்ந்து வணிகம் செய்யும் நிறுவனமான வேதாந்தா, இந்தியாவின் முன்னணி சுரங்க தொழில் செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.

 

இந்த கொரோனா காலத்தில் பல நிறுவனங்களும், தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வந்தன. ஆனால் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. சில நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்து வருகின்றன. ஆக இது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.

அந்த வகையில் வேதாந்தா நிறுவனம் நடப்பு ஆண்டில் 600 புதியவர்கள் வரையில், கேம்பஸ் மூலம் புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கிடைச்ச வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ.. மீண்டும் தங்கம் விலை குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

கேம்பஸ் இண்டர்வியூ

கேம்பஸ் இண்டர்வியூ

இது குறித்து வெளியான அறிக்கையில், கேம்பஸ்ஸில் இருந்து புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவது வணிக அர்த்தமுள்ளதாக உள்ளது. இது வலுவான வளர்ச்சியினைக் கொடுக்கும் என்றும் வேதாந்தா குழுமத்தின் CHRO மது ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். இது சந்தையில் சரியான திறமை கிடைப்பதை பற்றிய நிச்சயமற்ற தன்மையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எத்தனை பேரை தேர்தெடுக்க திட்டம்?

எத்தனை பேரை தேர்தெடுக்க திட்டம்?

அதோடு இது நிதி ரீதியாகவும் பாதுகாப்பானது என்றும் இடிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டில் நல்ல திறமையுள்ள சுமார் 500 - 600 புதிய பட்டதாரிகளை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கேம்பஸ் இண்டர்வியூக்கள் திறமை வாய்ந்த ஊழியர்களை கண்டறிய நல்ல ஒரு இடம்.

ஆன்லைன் மூலம் இண்டர்வியூ
 

ஆன்லைன் மூலம் இண்டர்வியூ

எனினும் டெக்னிக்கல் ஊழியர்களை நாம் பின்னாளில் பணியமர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கடினமான நேரங்கள் இருந்தபோதிலும், கடந்த ஆண்டின் பேட்ஜ்கள் ஆன்லைன் முறையில் சரியான நேரத்தில் செய்யப்பட்டது. நாங்கள் இதனை எங்களது முதலீடாக பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

பயிற்சி முக்கியம்

பயிற்சி முக்கியம்

எங்களது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவருக்கும், நிறுவனத்தில் சேர்ந்த முதல் 12 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் probation period வாயிலாகத் தான் செல்கின்றனர். இந்த காலத்தில் அவர்களது திறன் வெளிப்படும். கற்றுக் கொள்வார்கள். ஆக இதன் மூலம் பிசினஸ் அனலிஸ்ட், டிஜிட்டல் & டெக்னாலஜி, வரி விதிப்பு, விநியோக சங்கிலி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், நிதி திட்டமிடல், தரக் கட்டுப்பாடு, சொத்து மேம்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி, தொழில்துறை பாதுகாப்பு, சேவைகள், ஆய்வு & சுரங்க நடவடிக்கைகள், கனிம பதப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த பணியமர்த்தல் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vedanta plans to hire 600 fresh graduates current year

Vedanta updates.. Vedanta plans to hire 600 fresh graduates current year
Story first published: Thursday, December 3, 2020, 14:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X