யார் இந்த வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன்.. இவர் தான் அடுத்த CEA..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டிற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பதில் நிதியமைச்சகம் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கவுள்ளது. அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டிற்காக பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தை காட்டியது..!

இது நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது எவ்வாறு இருந்தது. அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன? உள்ளிட்ட பல விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

பதவி காலம் முடிவு

பதவி காலம் முடிவு

பொதுவாக இந்த பொருளாதார ஆய்வறிக்கையினை மத்திய தலைமை பொருளாதார ஆலோசகரே தயாரிப்பார். ஆனால் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய ஆலோசகரை நியமிக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 புதிய ஆலோசகர் யார்?

புதிய ஆலோசகர் யார்?

இந்த நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக வெங்கட்ராமன் அனந்த நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிரெடிட் சூசி குழுமம் மற்றும் ஜூலியஸ் பேர் குழுமத்தின் கல்வியாளரும், முன்னாள் நிர்வாகியுமாக இருந்தவராவர்.

அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்
 

அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்

எனினும் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகாலம் பதவி முடிந்த பிறகு மீண்டும் கல்வித் துறைக்கு திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு பிறகு பதவியேற்பார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் தொற்று நோயில் இருந்து திரும்ப தொடங்கியுள்ளது. எனினும் வேலையின்மை விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கான அந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நல்ல வளர்ச்சி விகிதத்திற்கான செயல்முறையை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முதலீடுகளை அதிகரிக்கவும், பட்ஜெட் இடைவெளியை குறைக்க வேண்டும். இது குறித்த முக்கிய ஆலோசனைகளை நிதியமைச்சருக்கும் வழங்கலாம்.

யார் இந்த நாகேஷ்வரன்

யார் இந்த நாகேஷ்வரன்

நாகேஷ்வரன் இந்தியாவின் புகழ்பெற்ற ஆந்திராவில் உள்ள க்ரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2019 மற்றும் 2021க்கு இடையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதி நேரமாக பணியாற்றிய அனுபவம் உள்ளது.

தலைமை முதலீட்டு அதிகாரி

தலைமை முதலீட்டு அதிகாரி

2011 வரை சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஜூலியஸ் பேர் & கோ வங்கியின் உலகளாவிய தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கல்வி நிறுவனங்களை திறக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி ஒரு கட்டுரையை ஆங்கில நாளிதழுக்கு எழுதியிருந்தார்.

venkatraman Anantha Nageswaran to be named CEA of india/யார் இந்த வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன்.. இவர் தான் அடுத்த CEA-வா..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

venkatraman Anantha Nageswaran to be named CEA of india

venkatraman Anantha Nageswaran to be named CEA of india/யார் இந்த வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன்.. இவர் தான் அடுத்த CEA-வா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X