சிங்கப்பூருக்கு புதிய விமானங்களை இயக்கும் விஸ்தாரா? எங்கிருந்து தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது இந்தியாவில் மீண்டும் சுறுசுறுப்பாக விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை இயக்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

 

அதேபோல் பல விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன

அந்த வகையில் விஸ்தாரா விமான நிறுவனம் தற்போது புனேயில் இருந்து சிங்கப்பூருக்கு புதிய விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது

5ஜி சேவைக்கு அதிக கட்டணம் செலுத்த இந்தியர்கள் தயாரா? சர்வே முடிவு! 5ஜி சேவைக்கு அதிக கட்டணம் செலுத்த இந்தியர்கள் தயாரா? சர்வே முடிவு!

விஸ்தாரா ஏர்லைன்ஸ்

விஸ்தாரா ஏர்லைன்ஸ்

இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் டிசம்பர் 2 முதல் புனே மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவையை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புனே - சிங்கப்பூர்

புனே - சிங்கப்பூர்

புனே மற்றும் சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 4 விமானங்களை இயக்க இருப்பதாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விஸ்தாரா தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன் அவர்கள் கூறியபோது, 'நீண்ட காலமாக புனே மற்றும் சிங்கப்பூர் இடையே விமானத்தை இயக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தோம். தற்போது பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் இந்த சேவையை தொடங்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள்
 

சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிக நோக்கத்திற்காகவும், சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகவும் சிங்கப்பூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்ய நாங்கள் இந்த சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் வினோத் கண்ணா தெரிவித்துள்ளார்

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

புனே மற்றும் சிங்கப்பூர் இடையிலான பயணத்திற்கு விஸ்தாரா நிறுவனம் எக்கனாமிக் வகுப்பிற்கு ரூபாய் 17,799 எனவும், பிரீமியம் எகானமி வகுப்பிற்கு ரூ.32,459 என்றும் பிசினஸ் வகுப்பிற்கு ரூ.82,999 என கட்டணம் நிர்ணயித்துள்ளது.

மும்பை - காட்மண்டு

மும்பை - காட்மண்டு

இந்நிலையில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் மும்பை மற்றும் காட்மண்டு இடையே நவம்பர் 15 முதல் தினசரி விமானங்களை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vistara to commence From Pune to Singapore flights from December

Vistara Launches Air Services From Pune to Singapore From December 2. Vistara planned four weekly flights between Pune and Singapore with a three-class configuration.
Story first published: Saturday, October 15, 2022, 9:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X