கழுத்து வரை பீர் குடிக்கும் மக்கள்.. இவங்க தான் நம்பர் ஒன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் பீர் குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பீர் குடிப்பதில் உலக அளவில் முதன்மையான நாடு எது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலக அளவில் பிரபலமான பீர் என்ற மதுபானம் குடிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஒயின், பிராந்தி, விஸ்கி போன்ற பானங்களை குடிப்பதற்கு பதிலாக பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டின் கணக்கின்படி உலக அளவில் 177 மில்லியன் கிலோலிட்டர் பீர் பானத்தை மக்கள் குடித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பீர் மக்களால் விரும்பி அருந்தப்படும் வந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் பீர் குடிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறுபட்டு வருகிறது.

விண்ணை தொட்ட பீர் விலை.. இங்கிலாந்து 'குடி'மக்கள் சோகம்..! விண்ணை தொட்ட பீர் விலை.. இங்கிலாந்து 'குடி'மக்கள் சோகம்..!

பீர் குடிப்போர் எண்ணிக்கை

பீர் குடிப்போர் எண்ணிக்கை

இதுகுறித்து தனியார் அமைப்பு ஒன்று எடுத்த ஆய்வு தகவலின்படி உலக அளவில் அதிக அளவு பீர் குடிக்கும் 10 நாடுகள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளன. பீர் மதுபானத்தை பொருத்தவரை உலக அளவில் அதிகம் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சீனாவில் பீர்

சீனாவில் பீர்

2020ஆம் ஆண்டில் சீனாவில் மட்டும் 36 மில்லியன் கிலோலிட்டர் பீர் குடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இது ஒலிம்பிக் போட்டியில் உள்ள 14,000 நீச்சல் குளத்தை நிரப்பப்படும் தண்ணீருக்கு சமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பீர் உற்பத்தி

பீர் உற்பத்தி

உலக அளவில் பீர் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஐந்தில் ஒரு பங்கை சீனா பெற்றுள்ளது என்பதும் சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பீர் உற்பத்தி செய்த வரலாறு இருப்பதாக தொல்பொருள் சான்றுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீர் உற்பத்தி செய்யும் செய்யும் நாடுகள்

பீர் உற்பத்தி செய்யும் செய்யும் நாடுகள்

இந்த நிலையில் உலக அளவில் அதிகமாக பீர் உற்பத்தி செய்யும் நாடுகள், அந்நாடுகள் தயாரிக்கும் பீர்களின் கிலோலிட்டர் மற்றும் சதவிகிதம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

1. சீனா 36,088 20.30%
2. அமெரிக்கா 24,105 13.60%
3. பிரேசில் 13,847 7.80%
4. ரஷ்யா 8,646 4.90%
5. மெக்சிகோ 8,287 4.70%
6. ஜெர்மனி 7,746 4.40%
7. ஜப்பான் 4,416 2.50%
8. யுனைடெட் கிங்டம் 4,088 2.30%
9. வியட்நாம் 3,845 2.20%
10. ஸ்பெயின் 3,815 2.10%

 

இந்தியாவில் பீர்

இந்தியாவில் பீர்

உலகில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, பீர் உற்பத்தி மற்றும் குடிப்பவர்கள் பட்டியலில் 23வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 1% குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பீர்

அமெரிக்காவில் பீர்

2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 24 மில்லியன் கிலோலிட்டர்களுக்கும் அதிகமான பீர் அமெரிக்கர்களால் குடிக்கப்பட்டுள்ளது. சீனாவை அடுத்து பீர் குடிப்பதில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் சீனாவை அடுத்து பீர் தயாரிப்பிலும் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

 சர்வதேச பீர் தினம்

சர்வதேச பீர் தினம்

உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் பீர் குடிக்கப்படுவதால் சர்வதேச பீர் தினம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளியன்று உலகம் முழுவதும் உள்ள 200 நகரங்களில் சர்வதேச பீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பீர் குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Visualizing Which Countries Drink the Most Beer!

Visualizing Which Countries Drink the Most Beer! | கழுத்து வரை பீர் குடிக்கும் மக்கள்.. இவங்க தான் நம்பர் ஒன்..!
Story first published: Wednesday, August 10, 2022, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X