கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியா ஸ்மார்ட்போன் விற்பனை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகள் சந்திக்கும் பாதிப்புகளை ஒப்பிடுகையில் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தை விற்பனை சரிவு அடையாமல் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தைச் சியோமி 2வது இடத்திற்குத் தள்ளிய நிலையில் தற்போது மற்றொரு சீன நிறுவனம் 2வது இடத்தில் இருந்து சாம்சங் நிறுவனத்தை 3வது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
மார்ச் காலாண்டு
கொரோனா பாதிப்பால் மார்ச் மாத கடைசியில் தான் வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்றாலும் அதிக மிகவும் அதிகமாக இருந்தது. இதன் மூலம் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்த மொபைல் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 30 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை வந்த நிலையில், 2020 மார்ச் காலாண்டில் இதன் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து 33.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சாம்சங் தொடர் சரிவு
இந்தியாவில் மற்ற அனைத்து துறைகளும் கடுமையான வர்த்தகப் பாதிப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், ஸ்மார்ட்போன் சந்தை நிலையான வர்த்தக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்திய சந்தையில் அதிக மொபைல் போன்கள் விற்பனை செய்யும் டாப் நிறுவனங்களில் சாம்சங் இந்த மார்ச் காலாண்டில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விவோ 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சியோமி
கடந்த சில வருடங்களாகவே சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த மார்ச் காலாண்டிலும் சுமார் 30.6 சதவீத வர்த்தகத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மார்ச் காலாண்டில் சியோமி சுமார் 1.03 கோடி போன்களை விற்பனைக்காக அனுப்பியுள்ளது.
விவோ
2019 மார்ச் காலாண்டில் வெறும் 45 லட்ச போன்களை மட்டுமே விற்பனைக்கு அனுப்பிய வீவோ இந்த வருட மார்க் காலாண்டில் 67 லட்ச போன்களை விற்பனைக்காக அனுப்பியுள்ளது. இதன் மூலம் 19.9 சதவீத சந்தை வர்த்தகத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது விவோ.
சாம்சங்
ஆனால் கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த வருடம் 73 லட்ச போன்களை விற்பனைக்காக அனுப்பிய நிலையில், இந்த ஆண்டு 63 லட்ச போன்களை மட்டுமே அனுப்பியுள்ளது. இதுகிட்டதட்ட 13.7 சதவீத சரிவு என்பதால் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்குச் சாம்சங் தள்ளப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications