ரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வோடபோன் குழுமம் இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி கண்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ரூ.12,000 கோடி நிலுவைத் தொகையும், அதோடு ரூ.7,900 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் தெரிவித்தது. இது குறித்து வோடஃபோன் குழுமம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தினை கடந்த 2016-ம் ஆண்டில் அணுகியது. இந்த நிலையில் வோடஃபோன் மீது இந்திய அரசு வரிச்சலுகை விதிப்பது, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. !

அதுமட்டும் அல்ல, இந்திய அரசாங்கம் வோடபோனிடம் இருந்து அரசாங்கம் நிலுவைத் தொகை கோருவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அதோடு இந்த நிறுவனத்தின் சட்ட செலவுகளுக்கு இழப்பீடாக இந்தியா 40 கோடி ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் NDTV.comல் வெளியான செய்திகள் கூறுகின்றன.

எனினும் இது குறித்து வோடபோனும், இந்தியா நிதியமைச்சகமும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ பதிலினை கொடுக்கவில்லை.

இந்த வழக்கில் கூறப்படும் 12,000 கோடி நிலுவையும், 7,900 கோடி அபாரதமும் இந்திய நிறுவனமான Hutchison Whampoaவிடம் இருந்து, கடந்த 2007ல் கையகப்படுத்தியதில் இருந்து உருவாகியது என்றும் கூறப்படுகிறது. அரசு தரப்பில், இந்த நிறுவனத்தினை கையகப்படுத்திய வோடபோன் தான் இதனை செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அரசாங்கத்தின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மொபைல் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் அளித்ததால், கடன்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் சில நிவாரணங்களை பெற்றன.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது நொடிந்து போன வோடபோன் நிறுவனத்திற்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும். ஏனெனில் ஏற்கனவே பலத்த போட்டியின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் நஷ்டத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் தான் ஏஜஆர் வழக்கும் வந்தது. இதன் காரணமாக ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்த நிறுவனத்திற்கு இன்னும் அழுத்தத்தினை கொடுத்தது. இந்த நிலையில் அரசு சமீப வாரங்களுக்கு முன்பு தான் 10 ஆண்டுகள் அனுமதி கொடுத்தது. இதற்கிடையில் தற்போது இந்த வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளது வோடபோன் நிறுவனத்திற்கு நல்ல விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone group won international arbitration against India

Vodafone group won international arbitration against India in Rs.20,000 crore tax case
Story first published: Friday, September 25, 2020, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X