கொரோனாவை மிஞ்சும் AGR பிரச்சனை.. நிர்மலா சீதாராமனை சந்தித்த குமார் மங்கலம் சுனில் மிட்டல்..எதற்காக!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வோடபோன் ஐடியா நிறுவனம் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், திடீரென கடந்த புதன்கிழமையன்று வோடபோன் ஐடியா தலைவர் குமார் மங்கலம் பிர்லாவும், இதே பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.

 

இந்த சந்திப்பில் ஏஜிஆர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்படவில்லை என மிட்டல் தனது தொலைகாட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பல வாரங்களுக்கு முன்னதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று குமார் மங்கலம் பிர்லா கூறியதை அடுத்து, தனது கடைசி முயற்சியாக இந்த சந்திப்பு உள்ளதாகவும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

சாதகமான தீர்ப்பு

சாதகமான தீர்ப்பு

இந்த சந்திப்பானது தொலைத் தொடர்பு துறை செயலாளர் அன்ஷூ பிரகாஷை சந்தித்த பிறகு வந்துள்ளது. ஏஜிஆர் பிரச்சனை 14 ஆண்டுகால சட்டபோரட்டத்துக்கு பின்பு, மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு கிடைத்த வெற்றி என கூறலாம். ஏனெனில் அரசின் எதிர்பார்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது என்றே கூறலாம். இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவையில் உள்ள சரி செய்யப்பட்ட மொத்த வருவாயை (ஏஜிஆர்) செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

கொஞ்சம் பொறுங்க பாக்கியை செலுத்துறோம்

கொஞ்சம் பொறுங்க பாக்கியை செலுத்துறோம்

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் மிக மோசமான பாதிப்பு வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கே. ஏனெனில் வோடபோன் நிறுவனம் சுமார் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்தி ஏர்டெல் நிறுவனம் நிலுவையில் 10,000 கோடி ரூபாயும், இதே வோடபோன் ஐடியா 2,500 கோடி ரூபாய் நிலுவையும் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டது, மேலும் வோடபோன் நிறுவனம் மேலும் 1,000 கோடி ரூபாயை வரும் வெள்ளிக்கிழமைக்குள் செலுத்தி விடுவதாகவும் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

பேங்க் கேரண்டி
 

பேங்க் கேரண்டி

தொடர்ந்து நஷ்டத்தினை மட்டுமே கண்டு வரும் வோடபோன் நிறுவனம், இந்த நிலுவை தொகையை செலுத்திய பின்னர் பெரும் பின்னடை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது எல்லாவற்றையுல் விட வோடபோன் ஐடியா நிறுவனம், அரசிடம் பேங்க் கேரண்டியையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியிருக்காது?

நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியிருக்காது?

வோடபோன் ஐடியாவின் மனுவினை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், நிலுவையை தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் கூறிவிட்டது. இந்த நிலையில் தான் வோடபோன் நிறுவனம் கட்டாயம் நிலுவையை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வோடபோனின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வங்கி உத்தராவதங்களை இணைப்பது சவப்பெட்டியின் கடைசி ஆணியாக இருக்கும். அதன் பிறகு நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் கூறியுள்ளார்.

என்ன கோரிக்கை?

என்ன கோரிக்கை?

இப்படி ஒரு நிலையிலேயே குமார் மங்கலம் பிர்லாவும், சுனில் மிட்டலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியுள்ளனர். ஆக மத்திய அரசிடம் அவர்கள் என்ன கோரிக்கை வைத்துள்ளனர். உச்ச நீதிமன்றம் மனுவை மறுத்துள்ள நிலையில், இவர்கள் எதற்காக நிதியமைச்சரை சந்திக்க வேண்டும். இது போன்ற எந்த செய்திகளும் வெளியாகாத நிலையில், வோடபோன் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க போகிறதோ தெரியவில்லை..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea chairman kumar mangalam and airtel chairman meet nirmala sitharaman

After birla met telecom secretary anshu prakash, Kumar mangalam, sunil mittal both were met Finance minister nirmala sitharaman, Mittal told TV channels that the AGR issue wasn't discussed a day.
Story first published: Thursday, February 20, 2020, 13:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X