இனி வொடபோன் ஐடியா இல்லை.. புதிய அவதாரம் எடுத்த Vi.. ஆரம்பத்திலேயே அசத்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி வொடபோன் ஐடியா இல்லைங்க.. Vi என புதிய பிராண்டாக அவதாரம் எடுத்துள்ளது வொடபோன்.

கடந்த 2018ம் ஆண்டில் ஒண்றினைந்து களமிறங்கிய வொடபோன் ஐடியா நிறுவனங்கள், அதன் பிறகு தான் வொடபோன் ஐடியாவாக மாறியது.

இந்நிலையில் தற்போது அதன் புதிய பிராண்ட் அடையாளத்தினை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது வொடபோன். இது Vi எனவும் தெரிவித்துள்ளது. வொடபோன் மற்றும் ஐடியா ஆகியவற்றின் முதல் எழுத்துகளை கொண்டு இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம்

தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம்

இது குறித்து வொடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர், இரண்டு பிராண்டுகளின் இணைப்பு உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பின் உச்சம் எனவும், இது எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கர் கூறியுள்ளார். இது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தும் என தாக்கர் தெரிவித்துள்ளார்.

கடும் போட்டி

கடும் போட்டி

ஜியோ வருக்கைக்கு பின்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கின என்பது மறுபதற்கில்லா உண்மையே. ஏனெனில் ஜியோவின் போட்டியினை சமாளிக்க முடியாமல் பெருத்த நஷ்டத்தினை கண்டன. குறிப்பாக வொடபோன் நிறுவனம் பெரும் நஷ்டத்தினைக் கண்டது. சொல்லப்போனால் நிறுவனத்தினை மூடும் நிலைக்கே தள்ளப்பட்டது.

10 ஆண்டுகால அவகாசம்

10 ஆண்டுகால அவகாசம்

இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக ஏஜிஆர் குறித்தான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது. எனினும் இதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் எந்த பலனும் இல்லாமல் போனது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் நிலுவையை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசத்தினை வழங்கியது. மேலும் மொத்த நிலுவையில் 10% தொகையினை அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தீர்பளித்துள்ளது. மேலும் இந்த 10 வருட அவகாசமானது ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்குவதாகவும், இது அடுத்த மார்ச் 31, 2031க்குள் ஏஜிஆர் நிலுவையை செலுத்தி விட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

வருடாந்திர கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

வருடாந்திர கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

வரும் செப்டம்பர் இறுதியில் இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிதிதிரட்டல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிதி திரட்டுதல் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிதி திரட்டல் மூலம் 25,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்றதக்க பத்திரங்களை வெளியிட அனுமதி

மாற்றதக்க பத்திரங்களை வெளியிட அனுமதி

இது குறித்து வெளியான மின்ட் செய்தியில், மாற்றத்தக்க பத்திரங்களை வொடபோன் ஐடியா வெளியிடலாம். இது குறைந்தது 10% வட்டியையாவது வழங்கலாம். இதன் காலம் 10 ஆண்டுகள் அவகாசம் இருக்கும். இதன் வெளியீடு அடுத்த 3- 4 மாதங்களுக்குள் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலையான வருமானத்தினை கொடுப்போம்

நிலையான வருமானத்தினை கொடுப்போம்

இதற்கிடையில் ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாய் ஆரம்பத்தில் 200 ரூபாயாகவும், பின்னர் இறுதியில் 300 ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டும் என்றும் நாங்கள் நிச்சயமான நம்புகிறோம். ஆக இந்த பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தினையும், முதிர்வு தேதியில் பிரிமீயத்துடன் அசல் தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

கடன் படிப்படியாக செலுத்தப்படும்

கடன் படிப்படியாக செலுத்தப்படும்

அதோடு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டவுடன் அர்பு அதிகரிக்கும். இதனால் பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். இதன் பிறகு கடன்கள் படிப்படியாக செலுத்தப்படும் என்று வொடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லாம் சரிங்க.. கட்டணங்களும் விரைவில் ஏற்றப்படலாம் என்பதனையும் வொடபோன் நிறுவனம் சூசகமாக கூறியுள்ளது. எப்படியோங்க.. போட்டியினை சமாளிக்க ஏற்றித் தானே ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea is now Vi: Vodafone plans to launch convertible bond

Vodafone idea plans to launch convertible bonds.
Story first published: Tuesday, September 8, 2020, 18:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X