வோடபோன் ஐடியா நிறுவனம் ஆறு நகரங்களில் தனது நெட்வொர்க் திறனை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து வெளியான செய்தியில் 6 நகரங்களில் சீனா தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளர்களுடன் இணைந்து, வோடபோன் ஐடியா இந்த விரிவாக்கத்தினை செய்ய உள்ளதாகவும் இத்துறை சார்ந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சீன விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட, தொலைத் தொடர்பு துறையை விரிவாக்கம் செய்வதற்கு மட்டுமே இந்த உத்தரவு இருக்கும் என்றும் தெரிகிறது.
குறிப்பாக ஆறு நகரங்களில் வோடபோன் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இந்த ஆறு நகரங்களில் இருந்து தான் நெட்வொர்க் தேவை அதிகம் இருப்பதாகவும், இதனால் தான் வோடபோன் நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக இது குறித்த நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள சீன நிறுவனங்களிடமே ஒப்படைக்க உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அந்த ஆறு நகரங்கள் என்னென்ன என்று தெரியவில்லை.
வோடபோன் ஐடியாவுக்கு ஹூவாய் மற்றும் இசட்டிஇ (ZTE) ஆகிய இரண்டு நிறுவனங்களும் உபகரணங்களை வழங்குகின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து வோடபோன் ஐடியாவில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பீர் சிங் சீன விற்பனையாளர்களுக்கு, வோடபோன் எந்த புதிய ஆர்டரையும் வழங்காது என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனா மற்றும் பிற நட்பு அல்லாத நாடுகளில் இருந்து நெட்வொர்க் கருவிகளை நிறுவுவதை கட்டுபடுத்த உதவும், தொலைத் தொடர்பு குறித்த தேசிய பாதுகாப்புகளுக்காக இந்த மாதம், அரசாங்கம் தொலைத்தொடர்பு உரிம விதிமுறைகளை திருத்த வாய்ப்புள்ளது.