வோடபோன் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே பலத்த சிக்கல்களுக்கு மத்தியில் தத்தளித்து வரும் நிலையில், தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டு வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நஷ்டம் 59.5% அதிகரித்து, 7230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! 4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

அர்பு விகிதம் அதிகரிப்பு

அர்பு விகிதம் அதிகரிப்பு

இது ஒரு புறம் கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், மறுபுறம் நஷ்டத்தினை ஈடுகட்ட கட்டணங்களை உயர்த்த தொடங்கியுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டிலேயே ஒரிரு முறைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தினை உயர்த்தின. தொடர்ந்து நஷ்டம் அதிகரித்திருந்தாலும் இதன் வருவாய் விகிதம் 3.3% அதிகரித்துள்ளது. அர்பு விகிதமும் முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது, 5.2% அதிகரித்து 115 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இழப்பு

வாடிக்கையாளர்கள் இழப்பு

இந்த கட்டண அதிகரிப்பானது 4வது காலாண்டிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டிலேயே வோடபோன் நிறுவனம் 5.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 3வது காலாண்டில் 4ஜி பயன்பாட்டாளர்கள் அதிகரித்துள்ளனர்.

கட்டணம் அதிகரிக்கலாம்
 

கட்டணம் அதிகரிக்கலாம்

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவீந்தர் தக்கர், நடப்பு ஆண்டிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை அதிகரிக்கலாம். எனினும் இது சந்தையின் போக்கினை கவனித்து அதற்கேற்ப இருக்கலாம் என கூறியுள்ளார். மொத்தத்தில் நடப்பு ஆண்டிலும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகலாம். கூடுதல் செலவு செய்யும் நிலைக்கும் தள்ளப்படலாம்.

20% வரையில் அதிகரிப்பு

20% வரையில் அதிகரிப்பு

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதமே 20% வரையில் கட்டணத்தினை உயர்த்தின. இது அர்பு விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதினை குறைத்திருந்தாலும், வருவாய் விகிதமானது அதிகரித்துள்ளது.

அரசு வாங்குகிறதா?

அரசு வாங்குகிறதா?

நடப்பு ஆண்டில் தொடரும் இந்த கட்டண அதிகரிப்பானது, 2023லும் தொடரலாம். இதற்கிடையில் வோடபோன் நிறுவனத்தின் 36% பங்கினை அரச வாங்கலாம் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இது இந்த நிறுவனத்தின் வாரியம் அதன் பொறுப்பினை ஈக்விட்டியாக மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், இதன் கடன் விகிதமானது இமய அளவு உச்சத்தினை எட்டி வருகின்றது. குறிப்பாக டிசம்பர் 31, 2021 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் 1,98,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் ஒத்தி வைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணம் 1,11,300 கோடி ரூபாயாகவும், ஏஜிஆர் நிலுவை 64,620 கோடி ரூபாயாகவும், அரசு மற்றும் வங்கிகள் நிதி நிறுவனங்களிடம் இருந்து 23060 கோடி ரூபாயாகவும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 2.74% அதிகரித்து, 11.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 11.50 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 10.80 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் 3.20% அதிகரித்து 11.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன்
இன்றைய உச்ச விலை 11.50 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 10.80 ரூபாயாகும்.இதே இதன் 52 உச்ச விலை 16.79 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 4.55 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea may increase tariff in current year & next year

Vodafone idea may increase tariff in current year & next year/வோடபோன் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X