இந்தியாவை விட்டு நாங்கள் போக மாட்டோம்.. வோடபோன் உறுதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இது ஒரு கஷ்டமான காலகட்டம் என்றே கூறலாம். ஏனெனில் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக ஐயூசி பிரச்சனையை மேற்கொண்டன. அது ஓய்வதற்குள்லேயே அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை விரைவில் அபராதத்துடன், வட்டியும் முதலும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஜியோவின் வருக்கைக்கு பின்பு மலையளவு கடன் பிரச்சனையில் இருந்து வரும் நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், இனி சேவையை தொடருமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், வோடபோன் இந்தியாவை விட்டு வெளியேற போவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வோடபோன் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நஷ்டம் கண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.. 3.54% பங்கு வீழ்ச்சி..!நஷ்டம் கண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.. 3.54% பங்கு வீழ்ச்சி..!

இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம்

இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம்

சந்தாதாரர்கள் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்திய நடவடிக்கைகளில் இருந்து வெளியேறக்கூடும் என்ற யூகத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும் வோடபோன் குழுமம் அதன் இந்திய செயல்பாடுகளில் இருந்து வெளியேறுவது பற்றி எதையும் சிந்திக்கவில்லை என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். எனவே இது குறித்த கருத்தை தெரிவிக்க முடியாது என்றும் மும்பை பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

இது தவறான தகவல்

இது தவறான தகவல்

இது குறித்து விளக்கம் கோரிய பங்கு சந்தையிடம், இழப்புகள் அதிகரித்ததால் இந்திய சந்தையை விட்டு வெளியேறக்கூடும் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் நாங்கள் இந்த கடன் மறுசீரமைப்பைத் தான் நாடுகிறோம் என்றும் வோடபோன் குழுமம் பதிலடி கொடுத்துள்ளது. மேலும் இந்த தகவலானது ஆதாரமற்றது. இது உண்மையில்லை இது தவறானது என்றும் வோடபோன் தெளிபடுத்தியுள்ளது.

எந்த சலுகையும் நாங்கள் கோரவில்லை

எந்த சலுகையும் நாங்கள் கோரவில்லை

மேலும் எந்தவொரு கடன் அளிப்பவரிடமும் கடன் மறுசீரமைப்பிற்கான எந்தவொரு கோரிக்கையும் நாங்கள் செய்யவில்லை. கட்டண விதிமுறைகளையும் சீரமைக்க நாங்கள் கோரவில்லை. எங்களது கடன்களை நாங்கள் கட்டிக் கொண்டு வருகிறோம். அல்லது எப்போது செலுத்த தவறினோம் என்றும் பரிவர்த்தனை தாக்கல் செய்ததில் நாங்கள் கூறி வருகிறோம். அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி வெளியேறுவோம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது வோடபோன்.

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

இந்த நிலையில் கடந்த ஜூன் காலாண்டில் வோடபோனுக்கு 4,067.01 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,757.66 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வோடபோன் ஐடியா இணைந்த பின்பாவது இந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து திரும்பு என்ற நினைத்த நிலையில், தற்போது மேலும் நஷ்டம் அதிகரித்துள்ளதே மிச்சம் என்றும் கூறப்படுகிறது.

இணைப்புக்கு பிறகு நஷ்டம் அதிகரிப்பு

இணைப்புக்கு பிறகு நஷ்டம் அதிகரிப்பு

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் இணைந்த பின்னர் இந்த நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது கவனிக்கதக்க ஒரு விஷயம். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 23,809 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது என்ற நிலையில், ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளிக்கும் இந்த நிறுவனம், இதிலிருந்து எப்படி மீண்டு வரும் என்று தான் தெரியவில்லை.

இது உண்மையில்லை

இது உண்மையில்லை

இந்த நிலையில் வோடபோன் நிறுவனம், நாங்கள் வெளியேறப்போவதாக கூறிய செய்திகள் உண்மையில்லை. நாங்கள் தற்போது வரை அரசுடன் தொடர்பில் தான் உள்ளோம். இந்த கஷ்டமான நேரத்தில் நாங்கள் எங்களது முழு ஆதரவையும் இந்திய நிர்வாகத்துக்கு முழுமையாக கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea says no idea to exit amid mountain loss

Vodafone idea says no idea to exit amid mountain loss, and we continue to pay the debt as and when dues come. Also we have no idea to exit to India
Story first published: Friday, November 1, 2019, 12:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X