ஜியோவுடன் போட்டியிட தயாராகும் வொடபோன்.. 8% ஏற்றத்தில் பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொலைத் தொடர்பு துறையினருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான காலமாகவே இருந்து வருகின்றது.

ஏனெனில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. அதிலும் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் வேறு பிரச்சனையே தேவையில்லை. ஜியோவுடன் போட்டி போட முடியாமல், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை கண்டன.

ஏன் அந்த சமயத்தில் சில நிறுவனங்கள் காணமல் போனதும் உண்மையே. அப்படி இருந்தாலும் ஜியோவின் போட்டியை சமாளித்து சமபோட்டியாளர்களாக பார்தி ஏர்டெல்லும், வொடபோன் ஐடியாவும் களத்தில் நின்று போராடி வருகின்றன.

 ரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..! ரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..!

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

அதனை இன்னும் மோசமாக்கும் விதமாக உச்ச நீதி மன்றத்தின் AGR சம்பந்தமான தீர்ப்பு பேரிடியாக வந்தது. இதன் படி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பாக்கி தொகை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர், போட்டியை சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் தங்களது லாபத்தினை மறந்து, சகட்டு மேனிக்கு டேட்டாக்களையும், வாய்ஸ் கால்களுக்கான சலுகைகளையும் அள்ளி வீசின.

ஜியோவுடன் போட்டி

ஜியோவுடன் போட்டி

ஏனெனில் ஜியோ ஆரம்பத்தில் முற்றிலும் இலவச வாய்ஸ் கால் சேவையை அளித்து வந்தது. ஆனால் தங்களின் லாபத்தினை மறந்த நிறுவனங்கள் பின்னர் தான் இதன் வலியை உணரத் தொடங்கின. இதன் காரணமாக பெரும் நஷ்டத்தினையும் கண்டன. இதன் பிறகு தான் கட்டண விகிதத்தினையும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆனால் இந்த நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, 5 ஜிக்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வொடபோன் குழுமமும் தற்போது நிதிகளை திரட்ட ஆரம்பித்துள்ளது.

வொடபோனிற்கு நிதி
 

வொடபோனிற்கு நிதி

இதற்கிடையில் வொடபோனிடம் இருந்த இந்தஸ் டவர்ஸ் நிறுவனத்தின் 11.15 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் வோடபோன் நிறுவனத்திற்கு 3,760.1 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தஸ் டவர்ஸ் நிறுவனமும், பார்தி இன்ப்ராடெல் நிறுவனமும் இணைக்கப்பட்ட பின்பு இந்த நிதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வொடபோனுக்கு சற்றே ஆறுதல்

வொடபோனுக்கு சற்றே ஆறுதல்

இது இந்த நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை தொகையை செலுத்த உதவும். இதனால் இந்த நிறுவனம் சற்றே அழுத்ததில் இருந்து வெளிவர முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த இணைப்புக்கு பிறகு வொடபோன் குழுமத்திற்கு 28.12 சதவீத பங்கு, ஏர்டெல் குழுமத்திற்கு 36.7 சதவீத பங்கும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டினை திரட்ட ஆயத்தம்

முதலீட்டினை திரட்ட ஆயத்தம்

ஓக்ட்ரீ கேப்பிடல், வார்தே பார்ட்னர்ஸ் போன்ற பல முதலீட்டாளர்கள் இணைந்து VI எனப் பெயர் மாற்றம் செய்து, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது வோடபோன் ஐடியா. மேலும் நிறுவனத்தில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் பெற்றுள்ளது. ஓக்ட்ரீ கேப்பிடல் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு 2 முதல் 2.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வொடபோன் திட்டம்

வொடபோன் திட்டம்

 

இந்த முதலீட்டின் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிலுவை தொகையைக் குறித்த நேரத்தில் செலுத்துவது மட்டும் அல்லாமல் வர்த்தக விரிவாக்கம் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய சிறப்பு மற்றும் தள்ளுபடி திட்டங்களையும் அறிவிக்க முடியும். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 8.31% ஏற்றம் கண்டு, 10.04 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea share jumps 4% after receiving Rs.3,760 crore

Vodafone idea updates.. Vodafone idea share jumps 8% after receiving Rs.3,760 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X