இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜியோ ஆரம்பம் முதலே மலிவான விலையில் இண்டர்நெட் டேட்டா, ஃப்ரீ வாய்ஸ் கால் என அறிவிப்புகள் வெளியிட்ட காரணத்தால் சக போட்டி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என இப்போட்டியை சமாளிக்க முடியாமல் தானும் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது.
இதனால் பல நிறுவனங்கள் அதிகளவிலான வருமானத்தை இழந்து தவித்து வருகிறது. ஜியோ அறிமுகமாகி 4 வருடங்கள் ஆகியும் ஜியோ நிறுவனத்தால் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இன்னமும் கடுமையான வருவாய் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகளை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என முடிவு செய்து 2021 முதல் டெலிகாம் சேவைக்கான கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஆனாலும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிப்போடும் அளவிற்கு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது நிதிநிலைமையை மேம்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்!

ஓக்ட்ரீ கேப்பிடல்
பிரிட்டன் டெலிகாம் நிறுவனமான வோடபோன் குரூப் பிஎல்தி தனது இந்திய வர்த்தகக் கிளையின் வர்த்தகத்திற்காக ஓக்ட்ரீ கேப்பிடல் என்னும் முதலீட்டு நிறுவனத்தின் தலைமையில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.

2 பில்லியன் டாலர்
ஓக்ட்ரீ கேப்பிடல், வார்தே பார்ட்னர்ஸ் போன்ற பல முதலீட்டாளர்கள் இணைந்து VI எனப் பெயர் மாற்றம் செய்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது.
ஓக்ட்ரீ கேப்பிடல் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு 2 முதல் 2.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா
இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையைத் திருப்பிச் செலுத்தும் முயற்சியில் வோடபோன் ஐடியா சில மாதங்கலுக்கு முன் 250 கோடி ரூபாய் அதாவது 3.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பங்குகள் விற்பனை செய்தும் கடன் வாயிலாகவும் நிதி திரட்ட முடிவு செய்தது.

வர்த்தக விரிவாக்கம்
இந்த முதலீட்டின் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிலுவை தொகையைக் குறித்த நேரத்தில் செலுத்துவது மட்டும் அல்லாமல் வர்த்தக விரிவாக்கம் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய சிறப்பு மற்றும் தள்ளுபடி திட்டங்களையும் அறிவிக்க முடியும்.