நிமிடத்துக்கு 13,000 ஆர்டர்களா.. களைகட்டும் ஆன்லைன் வியாபாரம்.. கதிகலங்கும் உள்ளூர் வியாபாரிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: அதிரடி தள்ளுபடி, மெகா சேல், கேஷ் பேக் ஆஃபர், என இது போன்ற வார்த்தகளை கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகம் வருவது அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா, அஜியோ என பல இணைய வர்த்தக தளங்கள் தான்.

அதிலும் பண்டிகை மாதம் என்றாலே இந்த தளங்களில் தள்ளுபடிகள் சலுகைகள் என களைக் கட்ட ஆரம்பித்து விடுகின்றன.

ஆன்லைனில் ஆர்டர் செய்து ஷாப்பிங் செய்ய ஆர்வம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பல தள்ளுபடிகள் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு பிடித்தமான பொருள்களைத் தேர்வு செய்து, பெருமளவு குறைந்த விலையில் உடனடியாக ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இனி கடனில் டிக்கெட் இல்லை.. அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா கறார்..!இனி கடனில் டிக்கெட் இல்லை.. அரசு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா கறார்..!

பேஷன் உடைகளுக்கான ஆர்டர்கள்

பேஷன் உடைகளுக்கான ஆர்டர்கள்

இந்த ஆர்டர்களான உணவு, உடை, ஆபரணங்கள், மொபைல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என பலவற்றையும் ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்பு ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மட்டுமே அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பேஷன் ஆடைகளுக்கான ஆர்டர்களும் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

மிந்த்ராவில் ஆடை

மிந்த்ராவில் ஆடை

இந்த நிலையில் ஆன்லைனில் ஆடைகள் என்றதுமே பெரும்பாலான இந்திய மக்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான மிந்த்ரா தான். இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. 2007-ம் ஆண்டு, டி-ஷர்ட், மக்ஸ் போன்ற பொருள்களை, மக்களின் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளும் ஸ்டோராக ஆரம்பிக்கப்பட்டு, பின்னாளில் ஆடை, ஆபரணம் போன்ற ஃபேஷன் பொருள்களை விற்க ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

யார் யாருக்கு உடை

யார் யாருக்கு உடை

ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கென்று ஏராளமான வகைகளில் தரமான ஆடைகளை வழங்கிக் கொண்டிருக்கும் மிந்த்ரா. இந்தியாவின் பாரம்பரிய உடைகள், வெஸ்டர்ன் உடைகள், அவற்றுக்கு ஏற்ற காலணிகள் என அதிக வெரைட்டிகளைக் கொண்டுள்ளது. ஆடை, வீட்டு அலங்காரப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், சமையலறைப் பொருள்கள் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட் பொருள்கள் பட்டியிலிடப்பட்டுள்ளன.

சமீபத்திய ஆஃபர்

சமீபத்திய ஆஃபர்

End of Reason Sale (EOR) என்ற அதன் சமீபத்திய விற்பனையில் கடந்த ஆண்டை விட 50 சதவிகித ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நான்கு நாட்கள் வழங்கி வந்த இந்த சலுகை விற்பனையில் 2.85 மில்லியன் வாடிக்கையாளர்கள் 4.2 மில்லியன் ஆர்டர்கள் மூலம், 9.6 மில்லியன் பொருட்களை ஆர்டர் செய்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புது வாடிக்கையாளர்கள்

புது வாடிக்கையாளர்கள்

இந்த நான்கு நாட்கள் சலுகை விற்பனையில் மட்டும் 6,00,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 68 சதவிகிதம் பேர் டயர் 2 மற்றும் டயர் 3 அடுக்குகளில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

என்னென்ன ஆர்டர் செய்யப்பட்டது?

என்னென்ன ஆர்டர் செய்யப்பட்டது?

ஜீன்ஸ், ஸ்வெட்ஷர்ட்ஸ், ஜாக்கெட்ஸ், டி-சர்ட் உள்ளிட்ட பல பொருட்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆக எங்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த இறுதி விற்பனையில் கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவிகிதத்திற்கும் மேல் விற்பனையை அதிகரித்துள்ளோம் என்றும் மிந்த்ரா ஜாபாங்கின் தலைவர் அமர் நாகராம் தெரிவித்துள்ளார்.

நிமிடத்துக்கு எத்தனை ஆர்டர்கள்

நிமிடத்துக்கு எத்தனை ஆர்டர்கள்

மிந்த்ரா இந்த விற்பனையின் ஆரம்பத்தின் முதல் ஒரு மணி நேரத்திற்கு, ஒரு நிமிடத்தில் 4000 ஆர்டர்களும், இதையடுத்து பின்னர் நிமிடத்துகுக்கு 13,000 ஆர்டர்களும் கிடைத்ததாகவும் மிந்தரா தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்களின் மேற்கத்திய உடைகள் மற்றும் ஆண்கள் ஜீன்ஸ், தெரு ஆடைகள் என அதிகமாக விற்பனையாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த பெரு நகரங்களின் விற்பனையில் பங்களித்தவர்களின் பட்டியலில் டெல்லி என்சிஆர் முதலிடத்திலும், டயர் 2 மற்றும் டயர் 3 அடுக்குகளில் ஜெய்ப்பூர் முதலிடத்திலும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Walmart owned myntra processes 13,000 orders per minute at festival time

Walmart owned fashion retailer mydra said End of Reason Sale being the biggest over with a 50% rise in over in last year. The 4 day fashion event witnessed 2.85 million customers placed 9.6 million items. Also nearly 6 lakh new customers participated in the four day sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X