TOP headlines: பிட்காயினுக்கு புதிய பிரச்சனை, ஆனா லாபம் ஏராளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்கள் நாளுக்கு நாள் தங்கள் முதலீட்டுப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டு வலிமை பெற்று வருகின்றனர். இதற்கு ஏற்றார்போல் பல முன்னணி கிரிப்டோ தளங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பை அளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதுமட்டும் அல்லாமல் இன்று கிரிப்டோ சந்தையைச் சுற்றிப் பல முக்கியமான நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

 இந்திய குடியுரிமை வேண்டாம்.. வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..! இந்திய குடியுரிமை வேண்டாம்.. வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்கள்..!

காயின்ஸ்விச்

இந்தியாவின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான காயின்ஸ்விட் குபெர் நீண்ட காலமாக இருந்த மக்களின் கோரிக்கையைப் புத்தாண்டு பிறக்கும் முன் நிறைவேற்றியுள்ளது. ஆம் காயின்ஸ்விச் தளத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கும் வர்த்தகத்திற்கும் உலகளவில் அதிகமான முதலீட்டாளர்களால் விரும்பப்படும் ஷிபா இனு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்துள்ளது. காயின்ஸ்விச் தளத்தில் சுமார் 14.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

WazirX

WazirX

காயின்ஸ்விச் போலவே நாட்டின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமாக விளங்கும் WazirX நிறுவனத்தில் ஜிஎஸ்டி துறை சோதனை செய்யும் போது சுமார் 40.5 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை வியாழக்கிழமை வட்டி, அபராதம் ஆகியவற்றைச் சேர்ந்து சுமார் 49.2 கோடி ரூபாய் அளவிலான நிதியைப் பெற்றுள்ளது.

 

WRX coins

WazirX நிறுவனம் WRX coins என்ற பெயரில் சொந்தமாக ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தது. இந்த WRX coins-ஐ Zanmai Labs வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டு நிலையில், இதன் வர்த்தகத்திற்கு எவ்விதமான ஜிஎஸ்டி வரியும் இதுவரை செலுத்தப்படவில்லை என்பதைக் கண்டு படிக்கப்பட்டு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வசூலி செய்துள்ளது.

பிட்காயின்

பிட்காயின்

பிட்காயின் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவிற்குப் பிரபலமாக இருக்கும் 21 மில்லியன் காயின் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் நிலையில் இதுவரை 18.89 பிட்காயின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் வெறும் 2 மில்லியன் பிட்காயின் மட்டுமே உற்பத்தி செய்ய மீதமுள்ள நிலையில் பிட்காயின் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தச் சில வருடத்தில் மீதமுள்ள 2 மில்லியன் பிட்காயினும் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டால் பிட்காயின் விலை வரலாற்று உச்சத்தைத் தொட துவங்கும்.

 அதிகம் லாபம்

அதிகம் லாபம்

2021ஆம் ஆண்டில் அதிகம் லாபம் கொடுத்த டாப் 5 கிரிப்டோகரன்சிகள் 1. Gala - 32570 சதவீதம், 2 Axie Infinity - 18,171 சதவீதம், 3. Sandbox - 16,464 சதவீதம், 4. பாலிகான் - 14,251 சதவீதம், 5. fantom - 13,730 சதவீதம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WazirX dodged Rs 40.5 crore in tax; Only 2 million Bitcoins left to be mined; 5 Crypto Coins in 2021

WazirX dodged Rs 40.5 crore in tax; Only 2 million Bitcoins left to be mined; 5 Crypto Coins in 2021 வந்தாச்சு ஷிபா இனு.. பிட்காயினுக்கு புதிய பிரச்சனை, ஆனா லாபம் ஏராளம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X