300 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வீவொர்க்.. யாராக இருக்கும்.. கவலையில் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீவொர்க் இன்க் உலகம் முழுவதும் சுமார் 300 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையில் குறைவான செயல் திறன் கொண்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல்கள் வெளியான நிலையில் இந்த நிறுவன பங்கின் விலையும் 3.5% சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.

நியூயார்க்கினை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அமெரிக்காவின் 40 இடங்களில் இருந்து வெளியேறியது. கொரோனா காலத்தில் நேர்மறையான வளர்ச்சியினை கண்ட நிறுவனம், நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அதன் தாக்கத்தினைபெரிதும் உணரத் தொடங்கியுள்ளது.

 ஸ்விக்கி கொடுத்த ஷாக்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..! ஸ்விக்கி கொடுத்த ஷாக்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!

 செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

நிறுவனத்தின் மூலமாக குத்தகை ஒப்பந்தங்களை போட்டவர்கள் பலரும் நீட்டிக்கவில்லை என தெரிகிறது. இது நிலவி வரும் மெதுவான வளர்ச்சி நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தற்போது பணி நீக்க நடவடிக்கைக்கும் திட்டமிட்டுள்ளது.

 அமெரிக்காவின் மந்த நிலை

அமெரிக்காவின் மந்த நிலை

அமெரிக்காவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பெரும் டெக் ஜாம்பவான்கள் கூட, சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா, சிஸ்கோ, ட்விட்டர் என பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தற்காலிகமாக பணியமர்த்தல் நடவடிக்கையினை முடக்கியுள்ளன.

 ஒப்பந்தத்தின் மதிப்பு

ஒப்பந்தத்தின் மதிப்பு

இப்படி இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் வீவொர்க் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இயல்பான ஒன்று தான் என்றாலும், இதனால் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

வீவொர்க்-ன் நீண்டகால குத்தகை ஒப்பந்தத்தின் மதிப்பு 15.57 பில்லியன் டாலராக இருந்தது. அதோடு அதன் குத்தகைதாரர்களில் பலரும் குறுகிய கால ஒப்பந்ததாரர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அதனை புதுபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் இது சாத்தியமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 வருமானம் சரியலாம்

வருமானம் சரியலாம்

வீவொர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் எபிட்டா விகிதம் சரிவினைக் காணலாம் என தெரிவித்துள்ளது. 4வது காலாண்டில் வருவாய் விகிதம் 870 - 890 மில்லியன் டாலர் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே எபிட்டா விகிதம் 65 மில்லியன் டாலர் எதிர்மறையாக இருக்கலாம் என்ற நிலையில் இருந்து, 85 மில்லியன் டாலர் எதிர்மறையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 வீவொர்க் ஐபிஓ-வுக்கு முன்பு

வீவொர்க் ஐபிஓ-வுக்கு முன்பு

வீவொர்க் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டில் பங்கு சந்தைக்கு வந்தது. இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு இதன் சந்தை மதிப்பு சுமார் 1.16 பில்லியன் டாலராக உள்ளது. இதன் ஐபிஓவுக்கு முந்தைய மதிப்பீடு 50 பில்லியன் டாலராக இருந்தது.

 என்ன செய்கிறது வீவொர்க்?

என்ன செய்கிறது வீவொர்க்?

வீ வொர்க் வணிக ரீதியிலான அலுவலக இடங்களை, ஐடி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். பல நாடுகளில் தனது சேவையினை வழங்கி வரும் இந்த நிறுவனம், பல லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடத்தை நிர்வகித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wework plans to layoff about 300 employees

Wework plans to layoff about 300 employees
Story first published: Friday, January 20, 2023, 11:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X