கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் எதிரொலியாக உலகம் முழுவதிலும் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்த ஊழியர்கள் அனைவருக்கும் Work From Home சலுகை கொடுக்கப்பட்டது.

 

ஆரம்பத்தில் 100 சதவீத ஊழியர்களுக்கு Work From Home என்பது சரியாக இருக்காது, வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது நடந்தது வேறு.

இந்தக் கொரோனா காலத்தில் Work From Home கலாச்சாரம் பெரிய அளவிலான வெற்றியை நிறுவனங்களும், சில குறிப்பிட்ட வர்த்தகத் துறைக்கும் கொடுத்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்பும் நிறுவனங்கள் Work From Home கலாச்சாரத்தைத் தொடரும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் சிஇஓவான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை பயங்கரமாக சரியலாம்! Credit Suisse கணிப்பு! எவ்வளவு வீழ்ச்சி காணும்?

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா எதிரொலியாக உலகில் பல்வேறு நாடுகள் இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன்-ஐ கடைப்பிடித்து வருகிறது. இதனால் அடுத்தச் சில மாதங்களுக்கு ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டிய நிலை நிலவும்.

இதேநேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பும் நிறுவனங்கள் கட்டாயம் சில சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் கலாச்சாரத்தைத் தொடரும் எனப் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

சதவீதம்

சதவீதம்

கண்டிப்பாகக் கொரோனா-க்கு பின்பும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் பணி நேரத்தில் எவ்வளவு சதவீதம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பதை ஆய்வு செய்யும். என்னுடைய கணிப்பின் படி பெருமளவிலான நிறுவனங்கள் கண்டிப்பாக ஊழியர்களை 50 சதவீதத்திற்கும் குறைவான நேரத்தை மட்டுமே அலுவலகத்தில் பணியாற்ற எதிர்பார்க்கும். எஞ்சியுள்ள நிறுவனங்கள் இயல்பான வழியில் மீண்டும் வர்த்தகத்தைத் தொடரும் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மென்பொருள் துறை
 

மென்பொருள் துறை

Work From Home கலாச்சாரம் மற்ற துறைகளை விடவும் மென்பொருள் துறைக்குப் பெரியளவில் வெற்றியைக் கொடுத்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றினாலும் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லை. ஆனால் மற்ற துறைகளுக்குக் குறிப்பாக உற்பத்தி, சேவைத் துறையில் இருப்பவர்களுக்குக் கொரோனா அதிகளவிலான பாதிப்பைக் கொடுத்துள்ளது.

குடும்பம்

குடும்பம்

வீட்டில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உடன் பணியாற்றும் காரணத்தால் ஆண்களும் சரி, பெண்களுக்குச் சரி எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ, அதே போல் சில மோசமான தருணங்களும் உள்ளது. குறிப்பாகப் பெண்கள் முழு நேரமும் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் பல்வேறு பணிகளை ஓரே நேரத்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பெண்களுக்கான ஒய்வு நேரம் மிகவும் குறைந்துள்ளது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

பில் கேட்ஸ் சொல்வது இருக்கட்டும் மக்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? கொரோனா-க்கு பின்பு தற்போது இருப்பது போல் Work From Home தொடரலாமா..? வேண்டாமா..? பதிலை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WFH is a great success: It will continue even after pandemic ends says Bill gates

WFH is a great success: It will continue even after pandemic ends says Bill gates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X