நீங்கள் மருத்துவ காப்பீடு செய்துள்ளீர்களா? இந்த போனஸை கேட்டு வாங்குங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக மெடிக்கல் பாலிசி எடுக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

நாம் எத்தனை லட்சம் சேமித்து வைத்து இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே நாளில் கரைந்து விடும் அபாயம் மருத்துவ சிகிச்சையில் மட்டு தான் உள்ளது.

எனவே ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருத்துவ காப்பீடு எடுத்திருக்கும் பலர் நோ கிளைம் போனஸ் என்பதை அறிந்திருப்பதில்லை. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்! இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்!

மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு எடுக்கும் பாலிசிதாரர்கள் அதிலுள்ள பல சலுகைகளை பயன்படுத்துவதில்லை. குறிப்பாக நோ கிளைம் போனஸ் என்ற சலுகையை விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இந்த சலுகையை பயன்படுத்தாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நோ கிளைம் போனஸ்

நோ கிளைம் போனஸ்

நல்ல ஆரோக்கிய உடல் நலத்துடன் இருப்பவர்களும் தற்போது மருத்துவ காப்பீடு எடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் ஒரு சில ஆண்டுகள் எந்த கிளைமும் செய்யாமல் இருந்தால் நோ கிளைம் போனஸ் என்ற சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

5% சலுகை
 

5% சலுகை

உதாரணமாக ஒருவர் ஒரு லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு எடுத்து இருந்து அவர் அந்த ஆண்டில் அவர் எந்தவிதமான கிளைமும் கோரவில்லை என்றால் அவருக்கு காப்பீட்டு நிறுவனம் இரண்டாம் ஆண்டில் 5 சதவீத போனஸ் அளிக்கும். அதாவது ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு கிடைக்கும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் கிளைம் செய்யவில்லை என்றால் அவர் 5 சதவீத போனஸை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளைம் பெற்றால்

கிளைம் பெற்றால்

ஒருவேளை காப்பீடு எடுத்த முதல் ஆண்டில் கிளைம் பெற்றிருந்தால் இரண்டாம் ஆண்டில் நோ கிளைம் போனஸ் கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது ஆண்டில் கிளைம் பெறவில்லை என்றால் நான்காவது ஆண்டில் நோ கிளைம் போனஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீமியத்திலும் சலுகை

பிரீமியத்திலும் சலுகை

மேலும் பாலிசி தொகையும் பெறுவது மட்டுமின்றி பாலிசி பிரீமியத்திலும் சலுகை பெறலாம். ஒரு லட்சம் கொண்ட மருத்துவக் காப்பீட்டுக்கு 10,000 கட்ட வேண்டும் என்றால் கிளைம் எதுவும் பெறவில்லை என்றால் ஐந்து சதவீத சலுகை கழித்துக்கொண்டு ரூ.9500 கட்டினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் கிளைம் செய்யவில்லை என்றால் 5% கழித்து பிரீமியம் கட்டும் வசதி உள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள்

இந்த சலுகையை பல மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் தாங்களாகவே பாலிசிதாரர்களுக்கு வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் நோ கிளைம் போனஸை கிளைம் செய்தால் மட்டுமே இந்த சலுகையை வழங்குகின்றன. எனவே நீங்கள் மருத்துவ பாலிசி எடுத்திருந்தால் எந்தவித கிளைமும் பெறவில்லை என்றால் உடனடியாக இந்த சலுகையை பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are No Claim Bonus Benefits in Health Insurance?

​​No claim bonus is an benefit to policyholder can enjoy on his health insurance. No claim bonus is bonus money added in the sum insured for every claim free year. It is like a reward that policyholder
Story first published: Thursday, October 13, 2022, 9:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X